எஸ். கே. ஆர். பொறியியல் கல்லூரி
சென்னை பூந்தமல்லியில் உள்ள கல்லூரி From Wikipedia, the free encyclopedia
Remove ads
எஸ். கே. ஆர். பொறியியல் கல்லூரி (SKR Engineering College) என்பது தமிழ்நாட்டின், சென்னை பூந்தமல்லியில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரி ஆகும். [1] இந்த கல்வி நிறுவனமானது 2001 ஆம் ஆண்டு திரு ஏ. எம். சீனிவாசன் மற்றும் கே. ராமதாஸ் ஆகியோரால் நிறுவப்பட்டது. புது தில்லியில் உள்ள அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ) இந்த கல்லூரிக்கு ஒப்புதல் அளித்துள்ளது, இது சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
Remove ads
வழங்கப்படும் பாடங்கள்
இளநிலை படிப்புகள்
- பி.இ. கணினி அறிவியல் மற்றும் பொறியியல்.
- பி.இ. மின் மற்றும் மின்னணு பொறியியல்.
- பி.இ. மின்னணுவியல் மற்றும் தொடர்பு பொறியியல்.
- பி.இ. இயந்திரப் பொறியியல்.
- பி.இ. குடிசார் பொறியியல்.
- பி.டெக். தகவல் தொழில்நுட்பம்.
- பி.இ. உயிர் மருத்துவ பொறியியல்.
- பி.இ. எந்திர மின்னணுவியல்
முதுநிலை படிப்புகள்
- முதுகலை வணிக மேலாண்மை
- முதுநிலை கணினி பயன்பாடுகள்
- முதுநிலை பொறியியல்
மேலாண்மை ஆய்வுத் துறை
துறை பற்றி
மேலாண்மை ஆய்வுத் துறையானது 2006-07 கல்வியாண்டில் நிறுவப்பட்டது. இரண்டு ஆண்டு கல்வித் திட்டமான இது அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இதில் 60 மாணவர்களை சேர்க்க ஏஐசிடிஇ- ஆல் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
முத்ரா
முத்ரா என்னும் மேலாண்மைத் துறைசார்ந்த ஒரு சங்கமானது 2016 திசம்பரில் எஸ்.கே.ஆர் பொறியியல் கல்லூரியின் மேலாண்மை ஆய்வுத் துறையால் நிறுவப்பட்டது. இந்த சங்கம் மாணவர்கள், கல்வியாளர்கள், ஆராய்ச்சி அறிஞர்கள், வணிக மற்றும் கார்ப்பரேட் நபர்களுக்கான கருத்தரங்குகளை நடத்துகிறது. மேலும் ஆராய்ச்சிக் கட்டுரைகளை நூலாக வெளியிடுகிறது. இப்போது சங்கம் முத்ரா என்ற பெயரில் ஒரு மாத மேலாண்மை இதழ் (உள்சுற்று) மற்றும் மின் இதழை வெளியிடுகிறது.
Remove ads
குறிப்புகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads