ஏஜாக்ஸ்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

ஏஜாக்ஸ் (AJAX = Asynchronous JavaScript And XML) என்பது வலைச்செயலிகளை உருவாக்குவதற்கான ஒரு முறைமையாகும். இது ஒரு தனித்துவமான நிரலாக்க மொழியோ மென்பொருளோ அல்ல. ஜாவாஸ்க்ரிப்ட், எக்ஸ் எம் எல் போன்ற வலைத்தள வடிவமைப்புக்கு பயன்படுத்தும் மொழிகளைப் பயன்படுத்தி பயனர் இடையீட்டுடன் கூடிய, இணையத்தை அடிப்படையாக கொண்டியங்கும் செயலிகளை வடிவமைக்க பயன்படுத்தப்படும் ஒரு தொழில்நுட்ப உத்தியே ஆகும்.[1][2][3]

இவ்வடிப்படையில் வலைத்தளம் அல்லது வலைச்செயலி ஒன்றை வடிவமைக்கும்போது மரபான முறைமைகள் வழியாக அமைக்கப்பட்டதிலும் பார்க்க அதிக வேகம் மிக்கதாகவும், கவர்ச்சிகரமானதாகவும், பயனர் ஊடாட்டம் இலகுபடுத்தப்பட்டும் இருக்கும்.இதன் பயன்பாட்டுக்கு உதாரணமாக கூகுள் மேப்புகள் உள்ளன.

இம்முறைமை பின்வரும் நிரலாக்க மொழிகளை அடிப்படையாகக் கொண்டது.

  • XHTML, CSS - வலைப்பக்க சட்டகத்தை உருவாக்கவும் எழிலூட்டி வடிவமைக்கவும் பயன்படுகிறது.
  • Javascript - (அல்லது உலாவியை மையமாக கொண்டியங்கும் பயனர் பக்க நிரல் மொழி ஒன்று) வழங்கப்பட்ட தகவல்களை இயங்கு நிலையில் காண்பிக்கவும் பெற்றுக்கொள்ளவும் பயன்படுகிறது.
  • XML - வழங்கிக்கும் உலாவிக்குமான தகவற் பரிமாற்றத்தை ஒழுங்குபடுத்தப்பட்ட வடிவத்தில் கடத்த உதவுகிறது.
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads