ஏலக்காய் மலை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஏலக்காய் மலை மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் தென் பகுதியில் அமைந்துள்ளது. இது தமிழ்நாட்டின் தென் மேற்கு பகுதியிலும் கேரளத்தின்தென் கிழக்கு பகுதியிலும் உள்ளது. இம்மலைப்பகுதியில் ஏலக்காய் அதிகம் பயிராவதால் இதற்கு ஏலக்காய் மலை என பெயர் ஏற்பட்டது. ஏலக்காய் தவிர காப்பி மற்றும் மிளகும் இங்கு பயிராகின்றன. ஏலக்காய் மலையின் நடுப்பகுதி அமைந்துள்ள ஆள்கூறு 9'52"N 77'09"E ஆகும். ஆழமான பள்ளத்தாக்குகள் உடைய மலைப்பகுதிகளை கொண்ட இதன் பரப்பு 2,800 சதுர கி.மீ. ஆகும். மேற்கு நோக்கி பாயும் பெரியாறு, பம்பை ஆறு ஆகியவை இம்மலைப்பகுதி வழியாக பாய்கின்றன. இடுக்கி அணை, முல்லைப் பெரியாறு அணை ஆகியவை இம்மலைத்தொகுதியில் உள்ளன. இதன் வடமேற்கில் ஆனை மலையும் வடகிழக்கில் பழனி மலையும், தென் பகுதியில் அகத்திய மலையும் உள்ளன.[1][2][3]
![]() | இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபிற்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபிற்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபிற்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துகளை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
குளிர் காலத்தில் இம் மலைப்பகுதியின் வெப்பநிலை சராசரியாக 15° செல்சியசும் கோடை காலமான ஏப்ரல், மே மாதங்களில் 31° செல்சியசும் இருக்கும். ஆண்டு சராசரி மழைப்பொழிவு பெரியாறு உள்ள பகுதிகளில் 2,000 - 3,000 மிமீ இது குறைந்து 1500 மிமீ ஆக திருவில்லிப்புத்தூர் வனவிலங்கு காப்பகத்தின் கிழக்கு பகுதியில் பெய்கிறது. இதன் மேற்கு பகுதி மூன்றில் இரண்டு பங்கு மழையளவை தென்மேற்கு பருவக்காற்றின் மூலம் பெறுகிறது. இவை வடகிழக்குப் பருவக்காற்றின் மூலமும் சிறிதளவு மழைப்பொழிவை பெறுகின்றன.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads