ஏழாம் கிரகோரி (திருத்தந்தை)

From Wikipedia, the free encyclopedia

ஏழாம் கிரகோரி (திருத்தந்தை)
Remove ads

திருத்தந்தை ஏழாம் கிரகோரி (இலத்தீன்: Gregorius VII; அண். 1015/1028[1] – 25 மே 1085), என்பவர் கத்தோலிக்கத் திருச்சபையின் திருத்தந்தையாக 2 ஏப்ரல் 1073 முதல் 1085 இல் தனது இறப்பு வரை இருந்தவர் ஆவார். இவரின் இயற்பெயர் சொவானா நகரின் ஹில்டப்ராண்தோ என்பதாகும் (இத்தாலியம்: Ildebrando da Soana).

விரைவான உண்மைகள் திருத்தந்தை புனித ஏழாம் கிரகோரி, ஆட்சி துவக்கம் ...

கத்தோலிக்கத் திருச்சபையினைச் சீர்திருத்த முயன்றவர்களில் இவர் மிகவும் குறிக்கத்தக்கவர் ஆவார். புனித உரோமைப் பேரரசர் நான்காம் ஹென்றிக்கும் இவருக்கும் இடையே நிகழ்ந்த ஆயர்நிலை திருப்பொழிவுக்கு ஆட்களை தேர்வுசெய்யும் அதிகாரம் குறித்த சச்சரவில் (Investiture Controversy) திருத்தந்தைக்கு இருந்த அதிகாரத்தை இவர் நிலைநாட்டினார். இதை ஏற்காத நான்காம் ஹென்றியினை திருச்சபையின் முழு உறவு ஒன்றிப்பிலிருந்து மூன்று முறை நீக்கினார். இதனால் மூன்றாம் கிளமெண்டினை ஹென்றி எதிர்-திருத்தந்தையாக நியமித்தார். திருத்தந்தைத் தேர்தலுக்கான புதிய வழிமுறைகளைச் சட்டமாக்கினார்.

திருப்பட்டங்கள் காசுக்கு விற்றதைக் கடுமையாக இவர் எதிர்த்தார். குருக்கள் கற்பு நிலை வாக்கு அளித்து திருமணமாகாமல் வாழ வேண்டும் என்று இருந்த சட்டத்தை இவர் கடுமையாக நடைமுறைப்படுத்தினார். இவர் தனது அதிகாரத்தை கடுமையாக நடைமுறைப்படுத்தியதால் பலரின் வெறுப்புக்கு ஆளானார்.[2]

திருத்தந்தை ஏழாம் கிரகோரிக்கு பதின்மூன்றாம் கிரகோரி 1584 இல் முத்திப்பேறு பட்டமும், 1728இல் திருத்தந்தை பதின்மூன்றாம் பெனடிக்ட் புனிதர் பட்டமும் அளித்தனர்.[3]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads