ஒருங்கிணைந்த மேலாண்மை நுழைவு தேர்வு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஒருங்கிணைந்த மேலாண்மை நுழைவு தேர்வு (JMET) இந்திய தொழில்நுட்பக் கழகங்களிலும் இந்திய அறிவியல் கழகத்திலும் உள்ள மேலாண்மை பள்ளிகளின் 2-ஆண்டு முழுநேர மேலாண்மை பட்டமேற்படிப்பு பாடதிட்டங்களில் சேர நடத்தப்படும் முதல்நிலை தேர்வாகும். இதில் வெற்றி பெற்றவர்கள் அடுத்த கட்ட தேர்வுகளுக்கு (குழு உரையாடல்/நேர்முகத் தேர்வு) தகுதியாகிறார்கள்.[1]
இத்தேர்வு சுழற்சி முறையில் ஓர் இ.தொ.க வினால் நடத்தப்படுகிறது. இத்தேர்வு மாணவரின் கணிதம்,தரவுகளை புரிதல்,ஏரண முடிவாற்றல் மற்றும் ஆங்கில பயன்பாடு திறன்களை சோதிக்கிறது. திசம்பர் திங்களில் நடத்தப்படும் இத்தேர்வு விடைத்தேர்வுகளில் சரியானதை தெரிந்தெடுக்கும் முறையில் அமைந்துள்ளது.நான்கு பகுதிகளுக்கும் தனி குறைந்த மதிப்பெண்கள் நிச்சயிக்கப் படுகின்றன. நான்கிலும் இந்த குறைந்த மதிப்பெண்களுக்கு மேல் மதிப்பெண் பெற்றவர்களுக்கு அனைத்திந்திய தரவரிசை எண் (AIR)வழங்கப்படுகிறது. இந்த தரவரிசை எண் அடிப்படையில், அவர்களது கடந்த கல்வி மதிப்பீடுகள்,கல்விசாரா திறன்கள் மற்றும் வேலை பட்டறிவு ஆகியனவும் கருத்தில் கொண்டு குழு உரையாடல்/நேர்முகத் தேர்வு அழைப்புகள் விடப்படுகின்றன.
Remove ads
2009 தேர்வு
கடந்த ஒருங்கிணைந்த மேலாண்மை நுழைவு தேர்வில் நான்கு பகுதிகளில் 120 வினாக்கள் இருந்தன. ஒவ்வொரு சரியான விடைக்கும் ஒரு மதிப்பெண் கூட்டியும் ஒவ்வொரு தவறான விடைக்கும் கால் (0.25) மதிப்பெண் குறைத்தும் மதிப்பிடப்பட்டது. காலை 1000 மணி முதல் 1300 மணிவரை மூன்று மணிநேரம் தேர்வு நடந்தது.
பார்க்க
இ.தொ.க மேலாண்மை பள்ளிகள்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads