ஒவ்வாமையூக்கி

From Wikipedia, the free encyclopedia

ஒவ்வாமையூக்கி
Remove ads

ஒவ்வாவையூக்கி (Allergen) என்பது ஒவ்வாமையைத் தூண்டும் காரணிகளாகும். இவை உடலுக்குள் செல்வதால் அவை உடலுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துகின்றன. இவை உயிருள்ள நுண்ணுயிர்ப் போன்றப் பொருளாகத் தான் இருக்க வேண்டும் என்பது தேவையில்லை. உடலின் எதிர்ப்பாற்றலைத் தூண்டும் எந்தவித வெளிப்பொருட்கள் (antigen) உட்சென்றாலும் அது தடுப்பாற்றலைத் தூண்டி உடலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் ஆவனம் செய்யும். அவ்வாறு தூண்டும் பொருட்களானது நோயெதிர்ப்புப் பொருட்களை மிதமிஞ்சி யுற்பத்திச் செய்யும் நிகழ்வை நாம் மிகையுணர்வூக்கம் என விளிக்கிறோம். இவ்வாறு ஒவ்வாமையைத் தூண்டும் பொருட்களானது முதல் வகை மிகையுணர்வூக்கத்தை தோற்றுவிக்கின்றன [1].

Thumb
அஎநுவால் எடுக்கப்பட்ட ஒருத் தாவரத்தின் மகரந்தமாகும். மகரந்தம் என்பது ஒரு ஒவ்வாமையூக்கியாகும்

.

பொதுவாக மானுடரிடத்தில் ஒவ்வாமையின் போது IgE என்னும் பிறப்பொருளெதிரி உடலில் அதிகமாக உற்பத்தியாகிறது. அது பெரும்பாலும் ஒட்டுண்ணிகளால் ஏற்படும் நோய்தொற்றலின் போது உடலில் மிகுந்துக் காணப்படும். ஆனால், ஒவ்வாமையூக்கி என்பது இவ் IgE என்னும் காரணியை ஒட்டுண்ணி அல்லாச்சூழ்நிலையில் உற்பத்திச் செய்து முதல் வகை மிகையுணர்வூக்கத்தை, குறிப்பாக ஒவ்வாமையுள்ள ஒருவரித்தில் கூடுதலாக உண்டாக்குகின்றன.[2]

பொதுவாகக் முதல்வகை மிகையுணர்வூக்கத்தை தோற்றுவிக்கும் ஒவ்வாமையூக்கிகள் சில:

|- | புரதங்கள்||அயல் நிணனீர் |- | |- | ||தடுப்பூசிப் புரதங்கள் |- | தாவர மகரந்தம்||பார்த்தீனியம் |- | ||பிர்ச் மரம் |- | ||ரைப்புல் |- | ||ராக்களை |- | ||திமோதிப் புல் |- | மருந்து||பெனிசில்லின் |- | ||சல்போனமைடுகள் |- | ||சிற்றிட உணர்மழுக்கி (Local anaesthetics) |- | ||சாலிசிலேட்டுகள் |- | உணவு||கொட்டைகள் |- | ||கடலுணவுகள் |- | ||முட்டை |- | ||பட்டானி, அவரை |- | ||பால் |- | பூச்சிச் சார்ந்த||தேனீ நச்சு |- | ||குளவி நச்சு |- | |- | ||எறும்பு நச்சு |- | ||கரப்பான் புல்லி |- | ||பொடுகு, பேன், மூட்டைப்பூச்சி |- | நுண்ணுயிர்||பூஞ்சை வித்து |- | விலங்கு||நாய், பூனை போன்ற உயிரினங்களின் மயிர் மற்றும் ரோமங்கள் |- | மற்றும் மரம் மற்றும் செடியின் பால் |- | * கோப்பு ஆவணம்: Kuby immunology |- | |}

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads