ஓநாயும் ஆட்டுக்குட்டியும்

மிஷ்கின் இயக்கத்தில் 2013 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia

ஓநாயும் ஆட்டுக்குட்டியும்
Remove ads

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் செப்டம்பர் 27, 2013ல் வெளியான இந்தியத் தமிழ் திரைப்படமாகும். இதனை மிஷ்கின் எழுதி, இயக்கி, தயாரித்துள்ளார். இப்படத்தில் பாடல்கள் இல்லை. பின்னணி இசை இளையராஜா அமைத்துள்ளார். இப்படத்தின் பின்னணி இசைக்கோவை குறுவட்டு தயாரிப்பாளரால் சுழியம் விலையிட்டு (இலவசமாக) தரப்பட்டது.[2]

விரைவான உண்மைகள் ஓநாயும் ஆட்டுக்குட்டியும், இயக்கம் ...
Remove ads

கதைச் சுருக்கம்

மருத்துவக் கல்லூரி மாணவரான சந்துரு (ஸ்ரீ), ஒரு நள்ளிரவில் வீடு திரும்பும்போது, துப்பாக்கியால் சுடப்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் எட்வார்டுயை (மிஷ்கின்) காண்கிறார். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முயற்சிக்கிறார். ஆனால், மருத்துவமனை ஊழியர்கள் எட்வார்டுக்கு சிகிச்சையளிக்க மறுக்கின்றனர். மனிதாபிமானத்தோடு, சந்துரு எட்வார்டை தனது வீட்டிற்கே கொண்டு சென்று, தனது மருத்துவ அறிவைப் பயன்படுத்தி அறுவை சிகிச்சை செய்து அவரது உயிரைக் காப்பாற்றுகிறார்.

குணமடைந்த எட்வார்ட் சந்துருவின் வீட்டிலிருந்து தப்பிச் செல்கிறார். எட்வார்ட் ஒரு கொடிய குற்றவாளி என்பது சந்துருவுக்குத் தெரிய வருகிறது. இந்நிலையில், காவல்துறையினர் சந்துருவின் குடும்பத்தினரைக் கைது செய்து, எட்வார்ட்டை கொல்லும் பணியை சந்துருவிடம் ஒப்படைக்கின்றனர். தனது குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய நிர்பந்தத்திலும், தான் உயிர் காப்பாற்றிய மனிதரைக் கொல்ல வேண்டிய நெருக்கடியிலும் சந்துரு சிக்கிக் கொள்கிறார்.

எட்வார்ட் மீண்டும் சந்துருவைத் தேடி வருகிறார். இந்த முறை சந்துரு எட்வார்டை சுடுவாரா? அல்லது எட்வார்ட் காவல்துறையிடம் சிக்குவாரா? என்பதே மீதிக் கதை.

Remove ads

நடிகர்கள்

விமர்சனம்

இந்து தமிழ் திசைக்காக விமர்சனம் எழுதியவர் "தரமான படங்களை ரசிக்கும் பொறுமை கொண்டவர்களுக்கான படம் மட்டுமல்ல. பொழுதும் போகிறது நன்றாக" என்று எழுதினர்.[3] நியூ தமிழ் சினிமாவிற்கு விமர்சனம் எழுதிய ஆர். எஸ். அந்தணன் "படத்தில் மருந்துக்கு கூட பகல் இல்லை. ஆனால் தமிழ்சினிமாவையே வெளிச்சமாக்கியிருக்கிறார் மிஷ்கின்" என்று எழுதினார்.[4]

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads