ஓம்பாய் நீரிணை

From Wikipedia, the free encyclopedia

ஓம்பாய் நீரிணைmap
Remove ads

ஓம்பாய் நீரிணை (ஆங்கிலம்: Ombai Strait; இந்தோனேசியம்: Selat Ombai; போர்த்துகீசியம்: Estreito de Ombai; தேதுனம்: Estreitu Ombai;) என்பது சுந்தா சிறு தீவுகளின் பகுதிகளான வெத்தார் (Wetar), அத்தாவுரோ (Atauro), தீமோர் (Timor) ஆகியவற்றில் இருந்து; அலோர் (Alor Archipelago) தீவுக் கூட்டங்களைப் பிரிக்கும் நீரிணை ஆகும்.

விரைவான உண்மைகள் ஓம்பாய் நீரிணை Ombai Strait Selat Ombai, அமைவிடம் ...

இந்த நீரிணை வடக்கில் உள்ள பண்டா கடலையும், தென்மேற்கில் உள்ள சாவு கடலையும் (Savu Sea) இணைக்கிறது. வெத்தார் தீவு, இந்தோனீசியாவின் மலுக்கு மாகாணத்தைச் சேர்ந்தது.

அலோர் தீவுக் கூட்டமும், மேற்கு திமோரும், இந்தோனேசியாவின் கிழக்கு நூசா தெங்காரா மாகாணத்தைச் சேர்ந்தவை. அத்தாவுரோவும், கிழக்குத் திமோரும் கிழக்குத் திமோர் நாட்டுக்கு உரியவை.[1] மலாக்கா நீரிணை வழியாகச் செல்ல முடியாத பெரிய கப்பல்கள் செல்வதற்கான ஒரு மாற்று வழியாகவும் இந்த ஓம்பாய் நீரிணை செயல்படுகிறது.

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads