கந்தர்வக்கோட்டை பாளையம்

தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

கந்தர்வகோட்டை பாளையம் என்பது, தமிழ்நாட்டில் உள்ள புதுக்கோட்டை மாவட்டத்தைச் சார்ந்த "கோமாபுரம்" என்ற ஊரை தலைமை இடமாகக் கொண்ட ஜமீன் ஆகும். இது "அச்சுதப்பண்டாரத்தார்" என்ற பட்டம் பூண்ட கள்ளர் மரபினரால் ஆளப்பட்டது.[1]

வரலாறு

1879 ஆம் ஆண்டு, இவர்களின் கீழ் 53 கிராமங்கள் இருந்தன (54468 ஏக்கர் பரப்பளவு). அரசாங்கத்திற்கு கொடுத்த இறைப்பகுதி 6577 ரூபாய் 4 அணா 11 பைசா ஆகும். 400 ஆண்டுகள் பழைய அரண்மனை முற்றிலும் இடிபாடுகளுடன் உள்ளது.[2][3]

புதுக்கோட்டை அரச குடும்பத்துடன் திருமண உறவு மூலம் கந்தர்வகோட்டை ஜமீன்கள் இணைந்திருந்தார்கள்.[4]

1967 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக, இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் சார்பாக ராஜா ராமச்சந்திர துரை அச்சுதப்பண்டாரத்தார் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[5]

பண்டைகால தமிழ்ச் சமூகத்தைச் சேர்ந்தவர்களான குறவர் இனமக்களை, கந்தவர்கோட்டை பாளையக்காரர்கள் தங்களுடைய முகவர்களாக நியமித்திருந்தார்கள்.[6]

Remove ads

முடிவுரை

கந்தர்வக்கோட்டை ஜமீன் பகுதியானது சுதந்திரத்திற்கு பிறகு கலைக்கப்பட்டு கந்தர்வகோட்டை வட்டமாக மாற்றப்பட்டது. அதனைத்தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்தோடு இணைக்கப்பட்டது.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads