கந்திகோட்டா
இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள இடம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
கந்திகோட்டா (Gandikota) என்பது ஆந்திரப் பிரதேசத்தின் கடப்பா மாவட்டத்தில் ஜம்மமலமடுவில் இருந்து 15 கி.மீ. தொலைவில் பெண்ணாறுக்கு அருகிலுள்ள ஒரு கிராமமாகும்.
கந்திகோட்டாவானது சக்திவாய்ந்த தெலுங்கு மரபினரான பெம்மாசனி மரபினரின் ஆட்சியின் கீழ் இருந்தது. இவர்களால் இங்கு கட்டப்பட்ட கோட்டையானது நாட்டின் மிக முக்கியமான கோட்டையாகவும் இருந்தது.[1]
Remove ads
சொற்பிறப்பு
கந்திகோட்டா என்ற பெயரில் உள்ள ‘கந்தி’ என்றால் தெலுங்கில் பள்ளத்தாக்கு என்று பொருள். கோட்டா என்றால் கோட்டை என்பதாகும். இங்கு ஒரு பெரிய பள்ளத்தாக்கு உள்ளதால் இப்படி அழைக்கப்படுகிறது. இங்கு பாயும் பென்னாறு நதியானது இங்குள்ள எர்ராமலையின் குறுக்கே ஓடுவதால் இந்தப் பள்ளத்தாக்கு ஏற்பட்டுள்ளது. பாறைகளை வெட்டி, அவற்றைக் கைகளால் அடுக்கி வைத்ததுபோல் உள்ளது. இங்கு சிவப்பும் மஞ்சளும் பழுப்புமாகப் பல்வேறு வண்ணங்களில் பாறைகள் மிக அழகாகக் காணப்படுகின்றன. இரண்டு பக்கமும் உள்ள பாறை அடுக்குகளுக்கு நடுவே 300 அடி பள்ளத்தாக்கில் பென்னாறு ஓடுவது அற்புதமான காட்சியாக உள்ளது. வனப்பகுதிகளில் அமைந்திருக்கும் இந்த அழகிய நிலப்பரப்பு பரந்த இயற்கை வளங்களைக் கொண்டுள்ளது.
Remove ads
வரலாறு
துவக்கக்கால வரலாறு
கந்திக்கோட்டா பகுதியின் சிறப்பை முதன்முதலில் கண்டறிந்து, கி.பி. 1123 ஆம் ஆண்டில் அருகில் உள்ள பொம்மனப்பள்ளியில் ஒரு மணல் கோட்டையை காபா ராஜா கட்டினார் இவர் கல்யாணியில் இருந்து ஆண்ட மேலைச் சாளுக்கிய மன்னனான அகவமல்ல சோமேஸ்வரனின் ஆதரவாளராவார்.[சான்று தேவை]
இந்த கிராமமானது சிலகாலம் மைக்லினீனி நயாக்கர்களால் ஆளப்பட்டது.[2] அதற்குப் பின்னரே பெம்மாசனி மரபினரின் ஆட்சியின்கீழ் ஆளப்பட்டது.[3][4][5][6] அண்மையில், வரலாற்று ஆய்வாளரான ஓபுல் ரெட்டி என்பவர் கந்திக்கோட்டா சம்மந்தப்பட்ட ஒரு செப்பேட்டைக் கண்டுபிடித்தார். இதன் காலம் 16 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டதாகும்.[7]
கடப்பா மாவட்டத்தைச் சார்ந்த புகழ்பெற்ற தெலுங்கு கவிஞரான வேமனா, குறுகிய காலம் கந்திக்கோட்டாவில் வாழ்ந்ததாக நம்பப்படுகிறது.[சான்று தேவை]
கந்திக்கோட்டாவை உலக பாரம்பரிய களமாக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.[8]
Remove ads
முக்கிய கட்டுமானங்கள்
கோட்டை வளாகத்தில் இரண்டு பழங்காலக் கோயில்கள் உள்ளன இதில் ஒன்றான ரங்கநாதர் கோயில் மிகவும் பழமையானதாகவும் அழகான கட்டிடக்கலையுடனும் காட்சியளிக்கிறது. இன்னொன்றான மாதவ சுவாமி கோயில் கட்டிடக்கலையில் ஹம்பிக்கு ஈடாக இருக்கிறது.[9] கோட்டையில் உள்ள ஜாமியா மசூதியை ஒட்டி மிகப் பெரிய தானியக் கிடங்கு ஒன்றும் உள்ளது. இந்தக் கோட்டைக்கு அரணாக இந்தக் கந்திகோட்டா பள்ளத்தாக்கு அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் கோட்டையில் பாரம்பரிய விழா நடத்தப்படுகிறது.[10]
சிதிலமடைந்து காணப்படும் கோட்டையின் மதில் சுவரானது ஐந்து கி.மீ. சுற்றளவில் அமைந்துள்ளது. 20 அடி உயரத்தில் கோட்டையின் நுழை வாயில் உள்ளது. கோட்டையில் 101 இடங்களில் 40 அடி உயரத்துக்கு முகப்பு அமைப்புகள் உள்ளன. செங்கல்லால் கட்டப்பட்ட ஒரு பரந்த அரண்மனை மற்றும் ஒரு பழைய பீரங்கியும் உள்ளது.
அணுகல் மற்றும் போக்குவரத்து
அருகில் உள்ள தொடர்வண்டி நிலையமானது கடப்பா மாவட்டத்தில் உள்ள முத்தனூரு (ரயில்வே குறியீடு: MOO) ஆகும் இது கந்திக்கோட்டாவிலிருந்து 26 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்த நிலையத்துக்கு கூட்டி சந்திப்பிலிருந்து இருந்து நிறைய ரயில்கள் உள்ளன.
அருகிலுள்ள நகரம் ஜம்மளமடுகு ஆகும்.[11] ஜம்மளமடுகுவின் பழைய பேருந்து நிலையத்திலிருந்து (காந்தி சிலை ஜங்ஷன்) கந்திக்கோட்டாவுக்கு பேருந்துகள் உள்ளன.
கோட்டைக்குள் நடந்துதான் செல்லவேண்டி இருக்கும். கோட்டைப் பகுதி பெரியதாக இருப்பதால் ஒரு வழிகாட்டியை வைத்துக்கொள்வது சிறந்தது.
Remove ads
வளர்ச்சி
2015 நவம்பரில், ஆந்திரப்பிரதேச முதல்வர், சந்திரபாபு நாயுடு, ஆந்திரப் பிரதேசத்தின் அடுத்த முக்கிய சுற்றுலா மையமாக கந்திக்கோட்டையை வளர்ப்பதற்கான திட்டத்தைத் தீட்டியுள்ளார்.[12]
மேற்கோள்கள்
மேலும் வாசிக்க
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads