கனிதி விசுவநாதம்
இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
கனிதி விசுவநாதம் (Kanithi Viswanatham) இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1932 ஆம் ஆண்டு சூலை மாதம் முதல் தேதியன்று இவர் பிறந்தார். இந்திய தேசியக் காங்கிரசு கட்சியின் உறுப்பினராக இருந்த இவர் 1989 மற்றும் 1991 ஆம் ஆண்டுகளில் இந்திய நாடாளுமன்றத்தின் கீழவையான மக்களவைக்கு இரண்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். சிறீகாகுளம் மக்களவைத் தொகுதியை கனிதி விசுவநாதம் பிரதிநிதித்துவப்படுத்தினார்.[1][2][3] சுகாதாரம் மற்றும் உடல்நல அமைச்சகத்தின் தூதரகக் குழு உறுப்பினராகவும் இவர் இருந்துள்ளார்.
Remove ads
இறப்பு
கனிதி விசுவநாதம் 15 ஏப்ரல் 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15 ஆம் தேதியன்று ஆந்திரப் பிரதேசத்தின் சிறீகாகுளத்தில் தனது சொந்த மாவட்டத்தில் காலமானார். இறக்கும்போது அவருக்கு வயது 90 ஆகும்.[4][5]
மேற்கோள்கள்
புற இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads