கன்காரியா திருவிழா

From Wikipedia, the free encyclopedia

கன்காரியா திருவிழாmap
Remove ads

கன்காரியா திருவிழா (Kankaria Carnival) என்பது இந்தியாவின் குசராத்தின் அகமதாபாத்தில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் ஒரு விழாவாகும். திசம்பர் கடைசி வாரத்தில் தொடங்கும் இந்த திருவிழா, 2008 முதல் அகமதாபாத்தின் கலாச்சார விழாக்களில் குறிப்பிடத்தக்கப் பகுதியாக இருந்து வருகிறது. இத்திருவிழாவில் கலாச்சார நிகழ்ச்சிகள், கலை கண்காட்சிகள், பொழுதுபோக்கு சவாரிகள் மற்றும் சமூக முயற்சிகள் உள்ளிட்ட பரந்த அளவிலான பொழுதுபோக்கு நிகழ்வுகளைக் கொண்டுள்ளது.[1][2]

விரைவான உண்மைகள் பூர்வீக பெயர், நாள் ...
Remove ads

வரலாறு

2008ஆம் ஆண்டு கங்காரியா ஏரிப் பகுதியைப் புதுப்பிப்பதற்காகத் தொடங்கப்பட்ட இந்தத் திருவிழா, பல ஆண்டுகளாகப் பல்வேறு மாற்றங்களைக் கண்டுள்ளது. 2020 கோவிட்-19 தொற்றுநோய் போன்ற சூழ்நிலைகளுக்கு ஏற்ப இந்த நிகழ்வு மெய்நிகர் முறையில் நடைபெற்றது.[3][4][5]

வருடாந்திர நடவடிக்கைகளில் கலைஞர்களின் நிகழ்ச்சிகள், கேளிக்கை சவாரிகள், உணவு அரங்கம் ஆகியவையும் அடங்கும். இந்த நிகழ்வு குசராத்தின் கலாச்சாரப் பாரம்பரியத்தை வலியுறுத்துகிறது. உள்ளூர் கலைஞர்கள் மற்றும் பொழுதுபோக்கு ஆர்வலர்களுக்கு ஒரு தளத்தை வழங்குகிறது.[6][7][8]

அகமதாபாத்தில் சுற்றுலாவை ஊக்குவிப்பதிலும் சமூக உணர்வை வளர்ப்பதிலும் இந்தத் திருவிழா முக்கியப் பங்கை வகிக்கிறது. உள்ளூர் பொருளாதாரம் மற்றும் கலாச்சார மேம்பாட்டிலும் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பை வழங்குகிறது.[9][10] இத்திருவிழா அகமதாபாத்து நகராட்சியால் ஏற்பாடு செய்யப்படுகிறது.[11]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads