கரீம்கஞ்சு மாவட்டம்

அசாமில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia

கரீம்கஞ்சு மாவட்டம்map
Remove ads

கரீம்கஞ்சு மாவட்டம் அசாமில் உள்ளது. இதன் தலைமையகம் கரீம்கஞ்ச் நகரில் உள்ளது. இந்த மாவட்டம் 1809 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது. [1]இம்மாவட்டத்தின் பெயரை ஸ்ரீ பூமி மாவட்டம் என்று பெயர் மாற்றப்படும் என 19 நவம்பர் 2024 அன்று அசாம் முதல்வர் அறிவித்தார். [2][3]

விரைவான உண்மைகள் கரீம்கஞ்சு மாவட்டம் Bengali: করিমগঞ্জ জেলা, நாடு ...
Remove ads

பொருளாதாரம்

Thumb
உழவு நிலங்கள்

இந்த மாவட்டத்தில் உழவுத் தொழிலே பொருளாதார வளர்ச்சிக்கு காரணமாக அமைந்துள்ளது.

ஆட்சிப் பிரிவுகள்

இந்த மாவட்டத்தை ஐந்து வட்டங்களாகப் பிரித்துள்ளனர். அவை: கரீம்கஞ்சு, பதர்பூர், நிலம்பசார், பாதேர்கண்டி, ராமகிருஷ்ண நகர்

போக்குவரத்து

இந்த மாவட்டத்தில் ரயில், சாலைவழிப் போக்குவரத்து வசதிகள் உள்ளன. கரீம்கஞ்சு நகரில் ரயில் நிலையம் உள்ளது. கரீம்கஞ்சு நகரில் இருந்து குவகாத்திக்கு பேருந்துகள் செல்கின்றன. ஏனைய வடகிழக்கு மாநிலங்களில் உள்ள நகரங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

மக்கள் தொகை

2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்போது, 1,217,002 மக்கள் வசித்தனர். [4]

சதுர கிலோமீட்டருக்குள் 673 மக்கள் என்ற அளவில் மக்கள் அடர்த்தி உள்ளது. [4] ஆயிரம் ஆண்களுக்கு இணையாக 961 பெண்கள் என்ற அளவில் பால் விகிதம் கணக்கிடப்பட்டுள்ளது. [4] இங்கு வசிப்பவர்களில் 79.72% பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர்.[4] முஸ்லீம்களும் இந்துக்களும் பெரும்பான்மையினராக உள்ளனர். பெரும்பான்மையானோர் வங்காள மொழியைப் பேசுகின்றனர். சிலர் மணிப்புரி மொழியிலும் பேசுகின்றனர். மெய்தெய், குக்கி, திரிப்புரி, காசி ஆகிய பழங்குடி இன மக்கள் வசிக்கின்றனர்.

Remove ads

சான்றுகள்

இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads