கற்பகநாதர்குளம் கற்பகநாதர் கோயில்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கற்பகநாதர்குளம் கற்பகநாதர் கோயில் சம்பந்தர் பாடல் பெற்ற தலமாகும். இது திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. காவிரி தென்கரைத் தலங்களில் 109ஆவது சிவத்தலமாகும். முன்னோர்களின் சாபம் நீங்க செல்ல வேண்டிய ஆசியாவின் ஒரே ஸ்தலம் என்ற பெருமதிப்பிற்குரிய இடம் ஆகும்.
Remove ads
தல விநாயகர்
இத்தலத்து விநாயகர் மாங்கனிப் பிள்ளையார், கற்பக விநாயகர்.[1]
வழிபட்டோர்
இராமபிரான், கார்த்திகாச்சுரன் எனும் அசுரன் ஆகியோர் வழிபட்ட தலம்.[1]
ஒளவையார்
இத்தலம் முருகப்பெருமான் ஒளவையாரிடம் சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா என்று கேட்டு விளையாடிய தலம். இத்தலத்தில் விநாயகர் இறைவனை வழிபட்டு மாங்கனி பெற்றார் என்பது தொன்நம்பிக்கை. இங்கிருந்து இரண்டு கி.மீ தொலைவிலுள்ள துளசியாம்பட்டினம் என்ற ஊரில் ஒளவையாருக்கு தனிக்கோயில் அமைந்துள்ளது.[1]
இவற்றையும் பார்க்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads