கலைஞர் நூற்றாண்டு பூங்கா

தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்திலுள்ள ஒரு பூங்கா From Wikipedia, the free encyclopedia

Remove ads

கலைஞர் நூற்றாண்டு பூங்கா என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்தின் கோபாலபுரம் பகுதியில் அமையப் பெற்றுள்ள ஓர் உலகத்தரம் வாய்ந்த நகரப் பூங்கா ஆகும்.

விரைவான உண்மைகள் கலைஞர் நூற்றாண்டு பூங்கா, வகை ...
Remove ads

அமைவிடம்

கடல் மட்டத்திலிருந்து சுமார் 33.34 மீ. உயரத்தில், (13.0506°N 80.2541°E / 13.0506; 80.2541) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, சென்னையின் கோபாலபுரம் பகுதியில் இப்பூங்கா அமைந்துள்ளது.[1]

Thumb
கலைஞர் நூற்றாண்டு பூங்கா
கலைஞர் நூற்றாண்டு பூங்கா
கலைஞர் நூற்றாண்டு பூங்கா (சென்னை)

அடிக்கல் நாட்டுதலும் மற்றும் திறப்பும்

தமிழ்நாட்டின் முதலமைச்சரால், 2024 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 27 ஆம் நாள் இப்பூங்காவிற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.[2]

2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 7 ஆம் நாள், தமிழக முதலமைச்சரால் இப்பூங்கா பொதுமக்கள் பயன்பாட்டிற்காகத் திறந்து வைக்கப்பட்டது.[3]

உருவாக்கம்

இப்பூங்காவானது 6.09 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிலமானது 'வேளாண் தோட்டக்கலை சங்கம்' என்ற தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமானதாக இருந்தது. தமிழ்நாடு அரசின் தீவிர சட்டப் போராட்ட முயற்சியால் இந்த நிறுவனத்தின் நிலமானது தமிழக அரசின் தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறைக்குச் சொந்தமானது. இந்நிலத்தின் தற்போதைய மதிப்பு இந்திய ரூபாயில் சுமார் ஆயிரம் கோடி ஆகும். சுமார் 46 கோடி இந்திய ரூபாய் மதிப்பீட்டில் இப்பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது. வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறையால் இப்பூங்கா நிறுவப்பட்டுள்ளது.[4][5]

சிறப்பம்சங்கள்

10,000 சதுர அடி பரப்பில் அரிய வகை பூச்செடிகளால் அமைக்கப்பட்டுள்ள 16 மீ. உயர கண்ணாடி மாளிகை, 500 மீ. நீளமுடைய கயிற்றில் தொங்கி செல்லும் சாகச அமைப்பு, அயல்நாட்டுப் பறவையகம், 23 அலங்கார வளைவு கொண்ட பசுமை குகை, மர வீடு, அருவி, இசை நீரூற்று, பார்வையாளர்களப் படம் பிடிக்கும் கலைஞர்களின் கலைக்கூடம், தொடர் கொடி வளைவுப் பாதை, 2,600 சதுர அடி பரப்பளவிலான ஆர்க்கிட் குடில், 120 அடி நீளமுள்ள பனிக்குகை, சூரியகாந்தி கூழாங்கல் பாதை, குழந்தைகள் விளையாடும் இடம், பசுமை நிழற்கூடாரம், பாரம்பரிய காய்கறி தோட்டம், சிற்றுண்டியகம், சுவர்களில் தீட்டப்பட்டுள்ள சுவரோவியங்கள் என இப்பூங்காவில் சிறப்பம்சங்கள் காணப்படுகின்றன.[6]

Remove ads

சுற்றுப்புறங்கள்

இப்பூங்காவின் வடக்குப் பகுதியில் செங்காந்தள் பூங்காவும், தெற்குப் புறத்தில் செம்மொழிப் பூங்காவும் அமைந்துள்ளன.

கட்டணங்கள்

பூங்கா நுழைவுக் கட்டணங்கள்,[7] கயிற்றில் தொங்கிச் சென்று சாகசப் பயணம் செய்ய தனிக் கட்டணங்கள், குழந்தைகளை மடியில் அமர்த்தி செல்ல தனி கட்டணம், பறவையகத்துக்கான பார்வைக் கட்டணங்கள், இசை நீரூற்று நடனம் காண கட்டணங்கள், கண்ணாடி மாளிகைக்கு பார்வைக் கட்டணங்கள், குழந்தை சவாரி விளையாட்டுகளுக்கான கட்டணங்கள், புகைப்படக் கருவிகள் பயன்பாட்டுக் கட்டணம், வீடியோ கேமராக்கள் பயன்பாட்டுக் கட்டணம் என சிறப்பு அம்சங்களுக்கான கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads