கழுகுமலை வெட்டுவான் கோயில்

தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஓர் இந்துக் கோயில் From Wikipedia, the free encyclopedia

கழுகுமலை வெட்டுவான் கோயில்map
Remove ads

கழுகுமலை வெட்டுவான் கோயில் என்பது தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில், கோவில்பட்டியிலிருந்து 22 கி.மீ. தொலைவில் கழுகுமலை என்னும் பேரூராட்சியில் அமைந்துள்ள ஒரு குடைவரைக் கோயில் ஆகும். ஊரின் மையப் பகுதியிலிருந்து 1 கி.மீ. தொலைவில், இவ்வூரின் பெயரைக்கொண்ட மலையின் ஒரு பகுதியில் இக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் பொ.ஊ. 800-இல் பாண்டிய மன்னன் ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்டது.[1][2][3]

விரைவான உண்மைகள் கழுகுமலை வெட்டுவான் கோயில், ஆள்கூறுகள்: ...
Remove ads

குகைக்கோயில்

தமிழகத்தில் உள்ள மிகச் சிறந்த குகைக்கோயில்களில் கழுகுமலை வெட்டுவான் கோயிலும் ஒன்றாகும். இக்கோயில் பொ.ஊ. 8ஆம் நூற்றாண்டில் பாண்டிய மன்னர்களால் செதுக்கப்பட்டதாகும். மிகவும் நுணுக்கமான சிற்பங்களைக் கொண்டு இக்கோயில் அமைந்துள்ளது. தற்போது கோயிலின் முழு பணியும் முற்றுப்பெறாமல், கருவறையில் பிள்ளையார் சிலை ஒன்று வைக்கப்பட்ட நிலையில் காணப்படுகிறது.[4]

அமைப்பு

Thumb
கழுகுமலையில் மலைப்பகுதியில் குடையப்பட்டுள்ள நிலையில் வெட்டுவான்கோயில்

மலைப்பகுதியில் அமைந்துள்ள இக்கோயில் ஒரே கல்லால் ஆனதாகும். கருங்கல்லைக் குடைந்து இக்கோயில் அமைக்கப்பட்டுள்ளது. கழுகுமலையில் ஏறி நடந்து செல்லும்போது இக்கோயில் கண்ணுக்குத் தெரியாது. சற்றே தாழ்ந்த தளத்தில் சுமார் 10 அடி இறக்கத்தில் இறங்கியே இக்கோயிலுக்குச் செல்ல முடியும். ஒரு சிறிய கோயிலில் கருவறையுடன் கூடிய விமானம் எவ்வாறு அமையுமோ அந்த அளவு இக்கோயில் காணப்படுகிறது.

Remove ads

சிற்பங்கள்

இங்கு பிரம்மா, திருமால், சிவன், தேவகன்னியர் மற்றும் பூத கணங்களின் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து சிலைகளும் உயிரோட்டத்தோடு காணப்படுகின்றன. முழுமை பெறாமல் உள்ள சிற்பங்களையும் அங்கு காணமுடியும்.[4]

மேலும் பார்க்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads