காக்கத்தியா இசைப் பூங்கா
இந்தியாவின் தெலங்காணாவில் உள்ள ஓர் இசை பூங்கா From Wikipedia, the free encyclopedia
Remove ads
காக்கத்தியா இசைப் பூங்கா (Kakatiya Musical Garden) இந்தியாவின் தெலுங்காணா மாநிலத்திலுள்ள வாரங்கல் நகரத்திற்கு அருகில் அமைந்துள்ளது. புகழ்பெற்ற பத்ரகாளி கோவில் இப்பூங்காவிற்கு அருகில் உள்ளது.[1][2]
Remove ads
பூங்கா
காக்கத்தியா இசைப் பூங்கா 15 ஏக்கர் (61,000 சதுர மீட்டர்) பரப்பளவில் பரவியுள்ளது. கண்களைக் கவரும் வண்ணமயமான விளக்குகளின் சரியான ஒத்திசைவுடன் நிகழும் காட்சிக்கு இன்பமான இசை நீர் நீரூற்று இந்த தோட்டத்தின் முக்கிய ஈர்ப்பாகும். பாறைகள் வடிவமைப்பு, செயற்கை நீர்வீழ்ச்சி போன்றவை காகதீயா இசைப் பூங்காவின் பின்னணியாக வைக்கப்பட்டுள்ளன. படகு சவாரி போன்ற பயணங்களுக்கு வசதியாக மனிதனால் உருவாக்கப்பட்ட ஏரியையும் இங்கு உருவாக்கியுள்ளனர். தினமும் இரவு 7 மணிக்கு இசை நீரூற்றுகள் தொடங்குகின்றன.
Remove ads
போக்குவரத்து
தெலுங்கானா மாநில சாலை போக்குவரத்து கழகம் உட்பட, பல தனியார் பேருந்து சேவைகள் பூங்காவிற்கு நல்ல போக்குவரத்து வசதியை வழங்குகின்றன. அருகிலுள்ள இரயில் நிலையம் காசிப்பேட்டை சந்திப்பு ஆகும். பூங்காவிலிருந்து 13 கி.மீ. தொலைவில் இந்த இரயில் நிலையம் உள்ளது.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads