காங்க்ரா வானூர்தி நிலையம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
காங்க்ரா வானூர்தி நிலையம் (Kangra Airport) என அதிகாரப்பூர்வமாக அறியப்படும் காங்க்ரா-காகல் வானூர்தி நிலையம்[1] என்பது இந்திய மாநிலமான இமாச்சலப் பிரதேசத்தில் காகலில் அமைந்துள்ள ஒரு உள்நாட்டு விமான நிலையமாகும்.இது தரம்சாலாவிலிருந்து 12 கி.மீ. தொலைவில் காங்க்ரா மாவட்டத்தில் காங்க்ரா நகர மையத்திலிருந்து 8 கிலோமீட்டர் தொலைவிலும், காங்க்ராவில் உள்ள தொடருந்து நிலையத்திலிருந்து 14 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. காங்க்ரா விமான நிலையம் பதான்கோட்-மண்டி என்.எச் 154இல் அமைந்துள்ளது. காங்க்ரா விமான நிலையம் இமாச்சலப் பிரதேசத்தின் மிகப்பெரிய விமான நிலையமாகும்.
Remove ads
அமைப்பு
இந்த விமானநிலையம் கடல் மட்டத்திலிருந்து 2492 அடி உயரத்தில் 1269 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்தில் ஒரு அஸ்பால்ட் ஓடுபாதை உள்ளது. இது 15/33, 1372 மீட்டர் நீளம் மற்றும் 30 மீட்டர் அகலம் கொண்டது. இதன் 300 பை 200 அடி ஏப்ரன் ஏடிஆர் -72 போன்ற 2 டர்போபிராப் விமானங்களுக்கு விமான நிறுத்தும் இட வசதியினை வழங்குகிறது. அதே நேரத்தில் இதன் முனையக் கட்டிடம் 100 பயணிகளைக் கையாளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
ஊடுருவல் உதவிகளில் PAPI விளக்குகள் மற்றும் NDB ஆகியவை அடங்கும்.[1]
Remove ads
விமான நிறுவனங்கள் மற்றும் இடங்கள்
மேலும் காண்க
- ஜாக்சன் ஏர்லைன்ஸ்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads