காசிகாண்டம்
தெலுங்கு இலக்கியம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
காசிகண்டம் ( Kasikhandamu ) என்பது 15 ஆம் நூற்றாண்டின் கவிஞர் சிறீநாதர் என்பவரால் படைக்கப்பட்ட தெலுங்கு இலக்கியப் படைப்பாகும். இது கண்டிப்பான அளவுடன் கூடிய தெலுங்கு இலக்கிய பாணியில் கவிதை வடிவில் இயற்றப்பட்டுள்ளது. காசி அல்லது வாரணாசியின் சுயவிவரமாக இது படைக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் கந்த புராணத்தின் காசி காண்டத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்டது.


ஆராய்ச்சியாளரான நிடுடவோலு வெங்கட ராவின் கூற்றுப்படி, ஆசிரியர் இந்த படைப்பை கி.பி 1440 இல் எழுதியிருக்கலாம். இவர் தனது படைப்பை ரெட்டி சாம்ராஜ்யத்தின் சிறீவீரபத்ர ரெட்டிக்கு (1423 - 1448) அர்ப்பணித்தார். சிறீ நாதர் ரெட்டியின் அரச கவியாக பணியாற்றினார். அவரைத் தொடர்ந்து, கஞ்சர்லா சரபகவி மற்றும் மோச்செர்லா அன்னையா ஆகியோர் முறையே 1500 மற்றும் 1650 ஆம் ஆண்டுகளில் காசி காண்டத்தை மொழிபெயர்த்தனர்.
சென்னகேசவுலு செட்டியின் ஞான சூர்யோதயா அச்சகத்தால் 1888 ஆம் ஆண்டு சென்னையில் வெளியிடப்பட்டது.[1] அதைத் தொடர்ந்து 1917 ஆம் ஆண்டு நிடுடாவோலு வெங்கட ராவ் அவர்களின் முன்னுரையுடன் சென்னை, வாவில்லா அச்சகம் வெளியிட்டது.[2]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
