காஞ்சிபுரம் செவ்வந்தீசர் கோயில்
காஞ்சிபுரத்திலுள்ள ஒரு சிவன் கோயில் From Wikipedia, the free encyclopedia
Remove ads
காஞ்சிபுரம் செவ்வந்தீசர் கோயில் (செவ்வந்தீசம்) எனப்படும் இது, காஞ்சிபுரத்திலுள்ள சிவக்கோயில்களில் ஒன்றாகும். மேலும், இது ஏகதள (ஒரு தளம்) விமான அமைப்புடைய செவ்வாய் பரிகார கோயிலாகும். இக்கோயில் பற்றிய குறிப்புகள் காஞ்சி புராண படலத்துள் உட்கோயில்களாகச் சொல்லப்பட்டுள்ளது.[1]
Remove ads
இறைவர், வழிபட்டோர்
- இறைவர்: செவ்வந்தீசர்.
- வழிபட்டோர்: வாயு பகவான் (செவ்வாய்)
தல வரலாறு
வாயு பகவான் சிவலிங்கப் பிரதிட்டை செய்து செவ்வந்தி மலர்கள் கொண்டு வழிபட்டு, நறுமணம் வாய்க்கப்பெற்றான் என்பது தல வரலாறு. ஆதலின் இது செவ்வந்தீச்சரம் என்றும் பெயர்பெற்றது.[2]
தல பதிகம்
- பாடல்: (செவ்வந்தீச்சரம்)
- தென்புலத்தோர் கடன்செலுத்தில் அனையர் துறக்கஞ்
- சென்றெய்தி, இன்புறுவார் அதன்கரைக்கண் இலிங்கம் அமைத்து
- மருத்திறைவன், மென்பனிநீர் செவ்வந்தி வேரிச் செழும்பூப்
- பலகொண்டு, வன்பகல வழிபட்டுக் கந்த வாகன் எனப் பெற்றான்.
- பொழிப்புரை: (1)
- பிதிரர்க்கு நீர்க்கடனாற்றில் முன்னோர் சுவர்க்கம் புக்கு இன்பமடைவர்.
- அத்தீர்த்தக் கரையில் சிவலிங்கம் நிறுவி வாயுதேவன் மெல்லிய பனி
- நீரையும் தேன் பொருந்திய செவ்வந்தியின் செவ்விய மலர்கள் பலவும்
- கொண்டு தீமை நீங்க வழிபாடு செய்து நறுமணத்தைச் சுமந்து வருவோன்
- எனப் பெற்றனன்.[3]
அமைவிடம்
தமிழ்நாட்டிலுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகரான காஞ்சிபுரத்தின் தென்மேற்குப் பகுதியில் அரக்கோணம் செல்லும் சாலையின் அருகே பஞ்சுப்பேட்டை பெரியதெருவில் உள்ள தமிழக அரசின் விதைப் பண்ணையின் உட்புற வளாகத்தில் இக்கோயில் உள்ளது. மேலும், தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவிலுள்ள, காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தின் தென்மேற்கு திசையில், சுமார் 1 கிலோமீட்டர் தொலைவிலுள்ள காஞ்சி ஏகாம்பரநாதர் கோயிலின் தென்மேற்கில் சற்று தூரம் சென்றால் இக்கோயிலை அடையலாம்.[4]
Remove ads
மேற்கோள்கள்
புற இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads