காஞ்சிபுரம் வழக்கறுத்தீசுவரர் கோவில்
காஞ்சிபுரத்திலுள்ள ஒரு சிவன் கோயில் From Wikipedia, the free encyclopedia
Remove ads
காஞ்சிபுரம் வழக்கறுத்தீசுவரர் கோவில் என்பது தமிழ்நாடு மாநிலத்தின் காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள ஒரு சிவன் கோயில் ஆகும்.
இக்கோயில் காஞ்சிபுரத்தில் காந்தி சாலையில் அமைந்துள்ளது. இக்கோயிலில் நெய் விளக்கு ஏற்றி வழிபாடு நடத்தினால் சட்டரீதியான வழக்குகள் மற்றும் குடும்ப பிரச்சனைகள் தீரும் என்ற நம்பிக்கை பக்தர்கள் மத்தியில் உள்ளது. இதனால் அரசியல் பிரமுகர்கள், பிரபலங்கள் இக்கோவிலுக்கு வந்து வழிபாடு நடத்தி செல்வர்.[1]
Remove ads
லிங்க திருமேனி
இக்கோயிலில் உள்ள வழக்கறுத்தீஸ்வரர் சிவலிங்கம் பதினாறு பட்டை கொண்ட லிங்க பானத்தை கொண்டுள்ளது.[2] இதன் தென்பகுதியில் பராசர ஈஸ்வர் என்ற லிங்க திருமேனி உள்ளது. இந்த லிங்கம் பராசர முனிவரால் வணங்கப்பட்டதாகும்.
திருவிழா
வருடம் தோறும் ஆனி மாதம் தேரோட்டம் நடைபெறுகிறது. வழக்கறுத்தீஸ்வரர் - மருகுவார் குழலி அம்பிகையுடன் தேரில் நான்கு ராஜ வீதிகள் வழியாக உலா வரும் சடங்குகள் நடைபெறுகிறது.
தலபுராணம்
சத், அசத் என்பதற்கான அர்த்தத்தை அறிந்துகொள்ள தேவர்களும், முனிவர்களும் காஞ்சிபுரத்தில் சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். அவர்களுடைய ஐயத்தை சிவபெருமானே நேரில் வந்து விளக்கியதால் இத்தலத்தில் சிவபெருமான் வழக்கறித்தீஸ்வரர் என அழைக்கப்படுகிறார்.[3]
ஆதாரங்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads