காரகும் கால்வாய்

From Wikipedia, the free encyclopedia

காரகும் கால்வாய்
Remove ads

காரகும் கால்வாய் (Karakum Canal, Qaraqum Canal, Garagum Canal; உருசியம்: Каракумский канал) துருக்மெனித்தானில் அமைந்துள்ளது. இது உலகின் மிகப்பெரிய நீர்ப்பாசன, நீர்வழங்கும் கால்வாய்களில் ஒன்றாகும். இக்கால்வாய் கட்டும் பணி 1954 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு 1988 இல் முடிவுற்றது. இதன் மொத்த நீளம் 1,375 கி.மீ. ஆகும். ஆண்டுதோறும் 13 கனகி.மீ. நீரை ஆமூ தாரியா ஆற்றில் இருந்து காராகும் பாலைவனத்திற்குக் கொண்டு செல்கிறது. துருமெனித்தானின் வேளாண்மை வளர்ச்சிக்கு இக்கால்வாய் முக்கியமான பங்காற்றுகிறது. குறிப்பாக பருத்தி ஓரினப்பயிர் முறை சோவியத் ஒன்றியத்தினால் பெருமளவு முன்னெடுக்கப்பட்டது, தலைநகர் அசுகாபாதிற்கு நீர்வழங்கும் முக்கிய ஆதாரம் இக்கால்வாயே ஆகும்.[1]

Thumb
காரக்கும் கால்வாய் (கீழ் வலப்பக்கம்), ஆன்கோவிட்சு நீர்த்தேக்கம், 2014
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads