கார்த்திகப்பள்ளி

இந்தியா, கேரளத்திலுள்ள கிராமம் From Wikipedia, the free encyclopedia

Remove ads

கார்த்திகப்பள்ளி (Karthikappally) என்பது இந்திய மாநிலமான கேரளாவில் உள்ள ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமமாகும். [1]

விரைவான உண்மைகள் கார்த்திகப்பள்ளி, நாடு ...
Remove ads

வரலாறு

கார்த்திகப்பள்ளி ஒரு காலத்தில் பௌத்த மையமாக இருந்தது. 904-933 ஆம் ஆண்டில் திருவிதாங்கூரின் ஆட்சியாளரான மார்த்தாண்ட வர்மர், இந்த ஊரை திருவிதாங்கூருடன் சேர்த்தார். 1742 மற்றும் 1753 ஆம் ஆண்டுகளில் அருகிலுள்ள இடங்களான காயம்குளம், அம்பலப்புழா ஆகியவை கார்த்திகப்பள்ளியுடன் சேர்க்கப்பட்டன. அதன் பின்னர் இது ஒரு முக்கிய பிராந்தியமாக மாறியது. இப்போது இருக்கும் புரக்காடும் காயம்குளம் இடையேயான பகுதி ஒரு காலத்தில் இதனுடன் இருந்தது. [2]

ஹரிப்பாடு கார்த்திகப்பள்ளி வட்டத்தின் தலைமையகமாக உள்ளது. மன்னார்சாலை கோயில் கிராமத்திற்கு அருகிலுள்ள புகழ்பெற்ற ஆலயமாகும். பாண்டி என்ற ஒரு தீவும் இங்கு அமைந்துள்ளது.

Remove ads

புள்ளிவிவரங்கள்

2001 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, கார்த்திகப்பள்ளியில் 19064 என்ற அளவில் மக்கள் இருக்கின்றர். இதில் 9107 ஆண்களும் 9957 பெண்களும் உள்ளனர் .[3]

குறிப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads