கார்த்திகா நாயர்
இந்திய நடிகை From Wikipedia, the free encyclopedia
Remove ads
கார்த்திகா நாயர் (Karthika nair) தென்னிந்தியத் திரைப்பட நடிகையாவார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளத் திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இவர் நடிகை ராதாவின் மூத்த மகள் ஆவார். 2009 ஆம் ஆண்டு ஜோஷ் என்ற தெலுங்குத் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். 2011 ஆம் ஆண்டு கோ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்பட உலகிற்கு அறிமுகமானார்.[1][2][3]
Remove ads
ஆரம்ப வாழ்க்கை
இவர் நடிகை ராதாவின் மகள் ஆவார். இவருக்கு ஒரு சகோதரனும் ஒரு சகோதரியும் (துளசி நாயர்) உள்ளனர். இவரும் ஒரு நடிகையாவார். இவர் தனது பள்ளிப் பருவத்தை மும்பையில் உள்ள போடர் இன்டர்நேசனல் பள்ளியில் படித்தார். பின்னர் லண்டன் பொருளாதாரக் கல்லூரியில் (London School of Economics) தொழில் கல்வி படித்தார்.
தொழில்
இவர் 2007ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்படத்துறையில் ஜோஷ் (Josh) என்ற திரைப்படத்தில் நடிகர் நாக சைதன்யாவின் ஜோடியாக அறிமுகமானார். இவர் 2011ஆம் ஆண்டு கோ என்ற தமிழ் திரைப்படத்தில் நடிகர் ஜீவாவுக்கு ஜோடியாக அறிமுகமானார். இந்தத் திரைப்படம் வெற்றித் திரைப்படமாக அமைந்தது. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்துக்கொண்டு இருக்கின்றார்.
வா டீல், கோல்ட், புறம்போக்கு போன்ற திரைப்படங்களில் நடித்தார்.
Remove ads
திரைப்படங்கள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads