காற்பந்து (சங்கக் காற்பந்து)

From Wikipedia, the free encyclopedia

காற்பந்து (சங்கக் காற்பந்து)
Remove ads

காற்பந்து, உதைபந்து அல்லது சங்கக் காற்பந்து என்பது காற்பந்தாட்டத்தில் பயன்படுத்தப்படும் பந்து ஆகும். இந்தப் பந்தின் கோள வடிவம், அளவு, எடை, மற்றும் தயாரிக்கப்படும் பொருள் ஆகியவற்றை பன்னாட்டுக் கால்பந்துச் சங்க வாரியம் பராமரிக்கும் காற்பந்தாட்டச் சட்டங்களின் சட்டம் 2 வரையறுக்கிறது. பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பும் அதன் கீழுள்ள கட்டுப்பாட்டு அமைப்புகளும் அவை நடத்தும் போட்டிகளுக்குக் கூடுதலான, மேலும் கடுமையான, சீர்தரங்களை வரையறுக்கின்றன.

Thumb
கருப்பு வெளுப்பில் துண்டித்த இருபதுமுக முக்கோணக வடிவமைப்புக் கொண்ட புழக்கத்திலுள்ள அடிடாசு டெல்சுடார் வகை பந்து.

துவக்க காலத்தில் விலங்குகளின் சவ்வுப்பையையும் இரைப்பையையும் காற்பந்துகளாகப் பயன்படுத்தினர். இவை நிறைய உதைபடும்போது கிழிபட்டன. மெதுவாக தற்காலத்தில் உள்ளவை போன்று காற்பந்துகள் மேம்படத் தொடங்கின. சார்லசு குட்யியர் மற்றும் டொமெனிக்கோ நோபிலி போன்றவர்கள் இயற்கை மீள்மம் மற்றும் வன்கந்தக கடினமாக்கல் முறைகளால் காற்பந்தின் வடிவமைப்பை மேம்படுத்தினர். தொழில்நுட்ப ஆராய்ச்சிகளால் இன்று மேம்பட்ட திறனுடைய காற்பந்துகள் தயாரிக்கப்படுகின்றன; இவற்றை மேம்படுத்தும் தொழில்நுட்ப ஆய்வுகளும் தொடர்கின்றன.

Remove ads

தயாரிப்பாளர்கள்

உலகின் பல நிறுவனங்கள் காற்பந்தைத் தயாரிக்கின்றன. இவற்றில் 40% காற்பந்துகள் பாக்கித்தானின் சியால்கோட்டில் தயாரிக்கப்படுகின்றன.[1] துவக்ககாலப் போட்டிகளில் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட பந்துகள் பயன்படுத்தப்பட்டு வந்தன. 1962 உலகக்கோப்பை காற்பந்து போட்டிகளில் விளையாடப்பட்ட பந்துகள் பிரச்சினைகளுக்குத் தீர்வாக அடிடாசு சான்டியாகோ எனப் பெயரிடப்பட்ட பந்தைத் தயாரித்தது.[2] – இதனால் 1970 முதல் அனைத்து அலுவல்முறை பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் ஒன்றியம் ஆட்டங்களுக்கும் அடிடாசு பந்து தயாரித்து வழங்குகிறது. மேலும் 2008 ஒலிம்பிக் காற்பந்தாட்டங்களுக்கும் பந்து தயாரித்து வழங்கியுள்ளது.[3] யூஈஎஃப்ஏ வாகையர் கூட்டிணைவு போட்டிகளுக்கு அடிடாசு பினாலே எனப்படும் பந்தைத் தயாரிக்கின்றனர்.

உலகக்கோப்பை காற்பந்து

உலகக்கோப்பை காற்பந்து இறுதிப்போட்டிகளில் கீழ்கண்ட காற்பந்துகள் பயன்படுத்தப்பட்டன:

மேலதிகத் தகவல்கள் உலகக்கோப்பை, பந்து(கள்) ...
Remove ads

ஒருங்குறி

ஒருங்குறி 5.2 ⚽ (U+26BD சாக்கர் பந்து) எஎன்ற அச்சை அறிமுகப்படுத்தியுள்ளது; இதனை மீயுரையில் அல்லது எனக் குறிப்பிடலாம்.[17] 2008இல் கார்ல் பென்ட்சுலின் முன்மொழிதலின் மூலம் இச்சேர்க்கை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.[18]

மேற்சான்றுகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads