காளிங்கராயன் அணை

From Wikipedia, the free encyclopedia

Remove ads

காளிங்கராயன் அணை (Kalingarayan Anicut) என்பது தமிழ்நாட்டில் காவிரி ஆற்றின் துணை ஆறான பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணையாகும். பவானி ஆறும் காவிரி ஆறும் சந்திக்கும் பவானியின் கூடுதுறைக்கு அருகே இது அமைந்துள்ளது.[1]. காளிங்கராயன் கால்வாய் இதிலிருந்து புறப்பட்டு ஈரோடு மாவட்டத்தை செழிக்கச் செய்கிறது.

விரைவான உண்மைகள் காளிங்கராயன் அணை, நாடு ...
Remove ads

வரலாறு

காளிங்கராயன் என்ற கொங்கு நாட்டுத் தலைவனால் 13 ஆம் நூற்றாண்டில் இது கட்டப்பட்டது. வேளாண்தொழிலுக்குப் பயன்படும் விதமாக காளிங்கராயன் வாய்க்காலுக்குத் தண்ணீரைத் திருப்பி விடுவதற்காக இவ்வணை கட்டப்பட்டது. பவானி ஆறு, நொய்யல் ஆறு இரண்டையும் இணைக்கும் இந்த அணை, பண்டைய ஆறுகளை இணைக்கும் பண்டையத் திட்டங்களுள் ஒன்றாக விளங்குகிறது. [2] [3]

மேம்பாடு

2016 இல் தமிழ்நாடு அரசு, இந்த அணையின் கரைகளை வலுப்படுத்தி மேம்படுத்தியது.[4]

சுற்றுலாத் தலம்

தமிழ்நாடு அரசு சுற்றுலா ஈர்ப்புத் தலமாக்கத் திட்டமிட்டுள்ளது.[5] இங்கு ஒரு குழந்தைகள் பூங்கா, நினைவு மண்டபமும் சிலையும் நிறுவும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு 2017 இல் திறக்கப்பட உள்ளது.[6] [7]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads