கிடுகு வெங்கட ராமமூர்த்தி

From Wikipedia, the free encyclopedia

கிடுகு வெங்கட ராமமூர்த்தி
Remove ads

கிடுகு வெங்கட ராமமூர்த்தி (1863-1940) என்பவர் தெலுங்கு மொழி எழுத்தாளர் ஆவர். முற்காலத்தில் பயன்படுத்தப்பட்ட எழுத்து வழக்கைக் காட்டிலும், தற்கால பேச்சு வழக்கே மக்களிடம் அதிக நெருக்கத்தைக் கொண்டது என்ற கருத்துடையவர். அதை தன் எழுத்துகளிலும் பதித்தார். இவர் மொழியியலாளரும் வரலாற்று ஆய்வாளரும் ஆவார். [1][2][3][4] பல மொழிகளையும் எழுத்து வடிவங்களையும் ஆராய்ந்தவர். சவரா என்ற பழங்குடியின மொழிக்காகவும் பாடுபட்டார். அதற்கு எழுத்து வடிவம் கொடுத்து, அகராதிகளையும் தயாரித்தார். [5]

விரைவான உண்மைகள் கிடுகு வெங்கட ராமமூர்த்தி గిడుగు వెంకట రామమూర్తి., பிறப்பு ...
Thumb
ராமமூர்த்தி சிலை
Remove ads

பேச்சு மொழிக்கான ஆதரவு

கல்வெட்டில் இருந்த மொழி வழக்கும், சமசுகிருதம் மிகுந்த செய்யுள் வழக்கும் பேச்சு வழக்கும் வேறுபட்டிருந்ததை அறிந்தார். பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் கற்பிக்கப்பட்ட எழுத்து வழக்கை பலரால் புரிந்துகொள்ள முடியவில்லை. அவற்றை அவர்களால் தங்கள் இயல்பு வாழ்க்கையில் பயன்படுத்த முடியாதது கண்டு வருந்தினார். சமூகத்துடன் மக்களை பிணைக்க பேச்சு வழக்கே உதவும் எனவும் நம்பினார். பாடங்களை பேச்சுத் தெலுங்கிலேயே கற்பிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

Remove ads

எழுதியவை

  • ‘கலிங்க சரித்திரம்’
  • சவர மொழிக்கான எழுத்துருவும் அகராதியும் [6]
  • Sora-English Dictionary[7][8]
  • Savara Patalu[9]

சிறப்பு

  • பிரித்தானியர்களால் ராவு சாகிப் பட்டம் வழங்கப்பட்டது
  • இவரது பிறந்த நாளில் தெலுங்கு மொழி நாள் கொண்டாடப்படுகிறது.[10]

இணைப்புகள்

சான்றுகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads