கிராவிட்டி (ஆங்கிலத் திரைப்படம்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கிராவிட்டி ஆங்கிலம்: Gravity ஒரு முப்பரிமாண ஆங்கிலத் திரைப்படம் ஆகும். இது 2013 ஆம் ஆண்டு வெளியானது. இத்திரைப்படத்தை எழுதி, இயக்கி, படத்தொகுப்பு செய்தவர் அல்போன்சா குயூரான் ஆவார். இத்திரைப்படத்தின் முக்கியக் கதாப்பாத்திரத்தில் ஜார்ஜ் குளூனி ரேயனாகவும் மற்றும் சாண்ட்ரா புல்லக் மாட் கோவால்ச்கியாகவும் நடித்தனர். இது விண்வெளி தொடர்பான[1][2][3][4] ஆங்கிலத் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தின் திரைக்கதையை அல்போன்சா குயூரான் அவரது மகன் சோனாச் (Jonás) உடன் இணைந்து எழுதினார். அதை யுனிவர்சல் டுடியோவிற்கு (Universal Studios) விற்பனை செய்தபின் வார்னர் பிரதர்ஸ் இத்திரைப்படத் தயாரிப்பில் ஆர்வம் காட்டித் தயாரித்தது. இந்நிறுவனம் பல்வேறு நடிகர்களை சாண்ட்ரா புல்லக் நடித்த வேடத்தில் நடிக்க அணுகியது. ராபர்ட் டவுனி ஜூனியர் முதலில் ஜார்ஜ் குளூனி நடித்த கதாப்பாத்திரத்தில் நடிப்பதற்காக ஒப்பந்தமாகி பின்னர் விலகினார். 2013 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 70 வது வெனிச் சர்வதேச திரைப்பட விழாவில் [5] கிராவிட்டி திரைப்படம் திரையிடப்பட்டது. அக்டோபர் 4 ஆம் தியதி 2013 அன்று அமெரிக்கா மற்றும் கனடாவில் இத்திரைப்படம் அதிக இடங்களில் வெளியிடப்பட்டது. இத்திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன் இதில் நடித்த சாண்ரா புல்லக் மற்றும் சார்ச் க்லூனி ஆகியோரின் நடிப்பும் பாராட்டப்பட்டது.
Remove ads
கதைச் சுருக்கம்
சர்வதேச விண்வெளி நிலைத்தில் தங்கியிருந்து ஆராய்ச்சி மற்றும் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளும் விண்வெளி வீரர்கள் எதிர்பாராத விதமாக விண்வெளிக் கழிவுகள் (Space debris) எற்படுத்திய விபத்தினால் அவர்களின் விண்வெளி ஓடம் பழுதடைந்துவிடுகிறது. இதன் தொடர்வினை காரணமாக சர்வதேச விண்வெளி நிலையம் மற்றும் அருகில் 100 கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள சீனாவின் சர்வதேச விண்வெளி நிலையம் ஆகியவை பழுதடைந்து விடுகின்றன. சாண்ரா புல்லக் தவிர மற்றவர்கள் அனைவரும் இறந்து விடுகின்னர். சார்ச் க்லூனியும் சாண்ரா புல்லக்கை காப்பாற்றும் பொருட்டுத் தன்னை விடுவித்துக் கொண்டு விண்வெளியில் தொடர்பின்றிச் செல்கிறார். இறுதியில் சாண்ரா புல்லக் தற்கொலை முயற்சிக்கு முயன்று பின்னர் கடினப் போராட்டத்திற்குப் பின் பூமிக்குத் திரும்பி வருகிறார்.
Remove ads
நடிகர்கள்
- சாண்ட்ரா புல்லக்
- ஜார்ஜ் குளூனி
- காரிச்
- ஓர்ட்டோ இக்னேச்சென்
- பால் சர்மா
- அமி வாரன்
- பசீர் சாவேசு
இசை
இசைத் தொகுப்பாளர் டீவன் பிரைச் (Steven Price) இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். 2013 ஆம் ஆண்டும் செப்டம்பர் மாதத் தொடக்கத்தில் 23 நிமிட இசை முன்னோட்டம் இணையத்தில் வெளியிடப்பட்டது..[6] செப்டம்பர் 17 ஆம் தியதி 2013 ஆம் ஆண்டு வால்டர் டவர் மியூசிக் (WaterTower Music) நிறுவனம் இத்திரைப்படத்தின் இசையை மின் வடிவிலும் (digitally) ஒலிப் பேழைகளாகவும் (physical formats) வெளியிட்டது.[7]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads

