கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்
இந்தியத் துடுப்பாட்ட வீரர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் ⓘ (பிறப்பு திசம்பர் 21, 1959) ஓர் இந்தியத் துடுப்பாட்ட வீரர். இந்தியத் துடுப்பாட்ட அணியின் மேனாள் தலைவர் மற்றும் தேர்வுக் குழுவின் தலைவர். ஸ்ரீகாந்த் துவக்க ஆட்டக்காரர் ஆகும்.
Remove ads
ஆட்ட வரலாறு
- இவர் தமது 21ஆம் வயதில் முதல் ஒ.ப.து ஆட்டத்தை இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிராக அகமதாபாத் நகரில் 1981ஆம் ஆண்டு துவங்கினார். இருநாட்கள் கழித்து மும்பையில் அதே அணிக்கு எதிராக தமது முதல் தேர்வுத் துடுப்பாட்டத்தைத் துவக்கினார். அவரது ஆட்டத்துணைவராக சுனில் காவஸ்கர் களமிறங்கினார். இருவரின் செயற்பாணியும் முற்றிலும் மாறுபட்டிருந்தது. கவாஸ்கர் இலக்கணப்படி நுட்பத்துடன் ஆடுபவர்; ஸ்ரீகாந்த் பந்துவீச்சைத் தாக்கி சுறுசுறுப்பாக விளையாடுபவர். கடும் எதிரணிகளிடையிலும் அவரது செயற்பாணியால் சிறந்த துவக்க ஆட்டத்தை வடித்துக் கொடுத்தார்.
இந்தியத் துடுப்பாட்ட அணியில் இடம்பிடித்த ஸ்ரீகாந்த் 1983 புருடென்சியல் உலகக் கோப்பை மற்றும் 1985 பென்சன் & எட்ஜஸ் உலக துடுப்பாட்ட சாதனையாளர் போட்டிகளை வென்ற அணியில் உறுப்பினராக இருந்தார். 1989ஆம் ஆண்டு இந்தியத் துடுப்பாட்ட அணித்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இங்கிலாந்துடனான ஒ.ப.து போட்டியில் வெற்றி இலக்கு 260ஆக இருக்கும்போது இரண்டு விக்கெட்கள் சரிந்தநிலையில் பந்துவீச்சுக்காரர் சேதன் சர்மாவை வழக்கத்தைவிட முன்னரே விளையாட அனுப்பி வெற்றி கண்டார். பின்னர் பாகிஸ்தான் தொடருக்கும் அணித்தலைவராகச் சென்று நான்கு தேர்வுகளிலும் ஆட்டத்தை சமன் செய்து சாதனை நிகழ்த்தினார். ஆனால் அவரது துடுப்பாட்டம் போதுமான ஓட்டங்களைப் பெற்றுத்தராத நிலையில் தேர்வாளர்கள் சர்ச்சைக்குரிய முறையில் அவரை அணியிலிருந்து விலக்கினர். இரண்டு ஆண்டுகள் கழித்து மீண்டுவந்தவர் அடுத்த ஆண்டு மீளவும் விலக்கப்பட்டார். தென்மண்டல அணிக்குக் கூட தேர்ந்தெடுக்காத நிலையில், தமது வயது காரணமாக செயற்திறனின் வேகம் குறைவதை உணர்ந்த ஸ்ரீகாந்த் 1993ஆம் ஆண்டு பன்னாட்டு துடுப்பாட்டங்களிலிருந்து ஓய்வு பெற்றார்.
ஓய்விற்கு பிறகு இந்திய 'ஏ' அணியை பயிற்றுவிக்கும் பொறுப்பை மேற்கொண்டு வெற்றியடைந்தார். பல விளையாட்டுத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் வல்லுனராக விமரிசனம் செய்து வருகிறார்.
செப்டம்பர் 27, 2008,அவர் இந்திய அணி தேர்வுக்குழுத் தலைவராக நியமிக்கப்பட்டார்.[1]

ஸ்ரீகாந்தின் மகன் அனிருத்தும் தமிழ்நாடுத் துடுப்பாட்ட அணியில் விளையாடுகிறார். பெப்ரவரி 18,2008இல் ஸ்ரீகாந்த் இந்திய முதன்மை கூட்டிணைவின் சென்னை சூப்பர் கிங்ஸ் அமைப்பின் நட்சத்திர தூதுவராக அறிவிக்கப்பட்டுள்ளார். [2]
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads