கிரெயில் ஆய்வகம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
புவியீர்ப்பு மீட்சி மற்றும் உட்பக்க ஆய்வகம் (Gravity Recovery and Interior Laboratory, GRAIL) ஐக்கிய அமெரிக்காவின் நாசாவின் டிஸ்கவரி திட்டத்தின் கீழ் நிலவினைக் குறித்த அறிவியல் ஆய்வுத் திட்டமாகும். இது நிலவின் உயர்தர புவியீர்ப்பு புல வரைவைக் கொண்டு அதன் உள்ளக கட்டமைப்பை தீர்மானிக்கப் பயன்படுத்தும். ஒரே டெல்டா இரக விண்கல ஏவுபொறி மூலம் செப்டம்பர் 10, 2011 அன்று இரண்டு சிறிய விண்கலங்கள் கிரெயில் A மற்றும் கிரெயில் B விண்வெளியில் செலுத்தப்பட்டன.[2][4][5] கிரெயில் ஏ ஏவப்பட்டதில் இருந்து ஒன்பதாவது நிமிடத்திலும் கிரெயில் B எட்டு நிமிடங்கள் கழித்தும் ஏறிபொறியிலிருந்து பிரிந்தன. தங்களுக்கான நிலவின் சுற்றுகையில் 24 மணி நேரங்கள் இடைவெளியில் சேர்ந்தன.[6] முதல் துருவிக் கலம் திசம்பர் 31, 2011 அன்றும் இரண்டாவது சனவரி 1,2012 அன்றும் தங்களுக்கான சுற்றுப் பாதையில் வந்தடைந்தன.[7]
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads