கிறிஸ்லாம் (நைஜீரியா)

விக்கிமீடியப் பக்கவழி நெறிப்படுத்தல் பக்கம் From Wikipedia, the free encyclopedia

கிறிஸ்லாம் (நைஜீரியா)
Remove ads

கிறிஸ்லாம் (Chrislam) நைஜீரியா நாட்டின் தென்மேற்கில் வாழும் யோருபா மக்கள் கடைபிடிக்கும் ஆபிரகாமிய சமயமாகும். கிறிஸ்லாம் சமயமானது கிறித்தவம் மற்றும் இசுலாம் ஆகியவற்றின் நற்கூறுகளை இணைத்து புதிய சமயமாக 1970-ஆம் ஆண்டு முதல் நைஜீரியா நாட்டின் லாகோஸ் நகரத்தில் துவக்கப்பட்டது. இந்த புதிய சமயத்தை பெரும்பாலான யோருபா மக்கள் கடைபிடிக்கின்றனர்.[1]இசுலாம் மற்றும் கிறித்தவம் ஒன்றிற்கு ஒன்று எதிராக இரண்டு தனித்தனி மற்றும் பிரத்தியேக மதங்களாக செயல்படுவதால், இரு மதங்களுக்கிடையில் உள்ள பொதுவான தன்மைகளைத் தேடி, இரண்டு சமயங்களையும் உள்ளடக்கிய பொதுவான ஒன்றியத்தை கிறிஸ்லாம் சமயம் ஊக்குவிக்கிறது. [1] நைஜீரியா நாட்டின் வடக்கில் இசுலாமியர்களும், தெற்கில் கிறித்தவர்களும் பெரும்பான்மையினத்தவராக இருப்பினும், கிறிஸ்லாம் சமயத்தைப் பின்பற்றும் யோருபா மக்கள் நைஜீரியாவின் தென்மேற்கில் யோருபாலாந்து பகுதியில் அதிகம் வாழ்கின்றனர்.

Thumb
கிறிஸ்லாம் சமயத்தைப் பின்பற்றும் யோருபா மக்கள் அதிகம் வாழும் நைஜீரியாவின் தென்மேற்கில் உள்ள யோருபாலாந்து
Thumb
நைஜீரியா மற்றும் பெனின் நாடுகளில் கிறிஸ்லாம் சமயத்தை பின்பற்றும் யோருபா மக்கள் அதிகம் வாழும் யோருபாலாந்து பிரதேசம் (மஞ்சள் நிறத்தில்)
Remove ads

கிறிஸ்லாம் இயக்கத்தின் அடிப்படை மெய்யியல்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads