குடவாயிற் கீரத்தனார்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
குடவாயிற் கீரத்தனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர்.[1] சங்க நூல்களில் இவரது பெயரில் 18 பாடல்கள் இடம் பெற்றுள்ளன.[2]
புலவர் பெயர் விளக்கம்
இவர் தன் பாடல் ஒன்றில் 'தேர்வண் சோழர் குடந்தை வாயில்' என்று குறிப்பிடுகிறார்.[3] இதனால் இந்தப் புலவர் இந்தக் குடவாயிலில் வாழ்ந்தவர் எனத் தெரிகிறது. கீரத்தனார் என்பது புலவர் பெயர். கீரன் அத்தன் என்னும் பெயர்களின் சேர்க்கை கீரத்தன். 'ஆர்' சிறப்புப் பெயர் விகுதி.
இவர் குறிப்பிட்டுள்ள மன்னர்கள்
அத்தி, எவ்வி, ஏற்றை, கங்கன், கட்டி, கணையன், சாத்தன்(ஒல்லையூர் கிழான் மகன்), சோழர், நன்னன், பழையன், புன்றுறை, பெரும்பூட் சென்னி, பொறையன், வழுதி ஆகிய மன்னர்களையும், கொங்கர், மழவர், வடுகர் ஆகிய குடிமக்களையும், 'நுணங்கு நுண் பனுவல் புலவன்' என்று புலவர் ஒருவரையும் தம் பாடல்களில் குறிப்பிட்டுள்ளார்.
குடவாயில் கீரத்தனார் சொல்லும் செய்திகள்
இவர் தம் பாடல்களில் பல அரசியல் நிகழ்வுகளையும், தமிழரின் பழக்கவழக்கங்களையும் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் நிகழ்வுகள்
- பெரும்பூண் சென்னி என்னும் சோழ மன்னன் அழும்பில் என்னும் ஊரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்தான். குடவாயில், கழுமரம் ஆகிய ஊர்கள் அவன் நாட்டில் இருந்தன. சென்னியின் படைத்தலைவன் பழையன். இந்தப் பழையனை நன்னன், ஏற்றை, அத்தி, கங்கன், கட்டி, புன்றுறை, கணையன் என்னும் ஏழு பேர் சேர்ந்துகொண்டு கட்டூர் என்னுமிடத்தில் தாக்கினர். போரில் பழையன் கொல்லப்பட்டான். சோழன் கணையனைச் சிறை பிடித்தான். தன் நாட்டுக் கழுமலச் சிறையில் அடைத்தான். மற்றைய ஆறு பேரும் தப்பி ஓடிவிட்டனர்.[4]
- சோழர்கள் தம் செல்வத்தைக் குடந்தையில் பாதுகாத்து வைத்திருந்தனர்.[5] இது சங்ககாலச் சோழர்களின் அரசுக் கருவூலம்.
- மேற்குக் கடற்கரைத் துறைமுகமாகிய தொண்டி பொறை என்னும் கொங்கு நாட்டை ஆண்ட பொறையர் என்னும் அரசர்களுக்கும் துறைமுகமாக விளங்கியது. திண் தேர்ப் பொறையன் தொண்டி (அகநானூறு 60)
- ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன் என்னும் வள்ளல் இறந்தபோது சிறுவர், சிறுமியர், பாணன், பாடினி முதலான யாரும் முல்லைப்பூவைச் சூட்டிக்கொள்ளவில்லையாம். இந்தச் சாத்தன் வள்ளல் மட்டுமன்றி பெரு வீரனாகவும் விளங்கியவன்.[6]
வழக்கும் தீர்ப்பும்
- எவ்வி நாட்டு உழவர்க்கும் உமணர்க்கும் இடையே சிறு பூசல். உழவர் நெல் தூற்றினர். அதன் தூசி உமணரின் உப்புப் பாத்தியில் படிந்துவிட்டது. உமணர்கள் உழவரின் இருப்பிடத்துக்கே வந்து சேற்று நிலத்தில் உழவரைத் தாக்கினர். பெருஞ் சண்டை மூண்டது. முதியவர்கள் குறுக்கிட்டுத் தடுத்தனர். உமணர்களுக்கு உழவர்களைத் தேறல்-கள் வழங்கும்படி செய்து சண்டையைத் தீர்த்து வைத்தனர்.[7]
அணிகலன்
தமிழர் பழக்கவழக்கங்கள்
- நெய்தல் நில மகளிர் உப்பு விற்றுக் கொண்டுவந்த நெல்லைக் குற்றிப் புளிச்சோறு கட்டி மீன் பிடிக்கச் செல்வோரிக்குத் தருவார்கள்.[10]
- தோலைக் கையில் சுற்றிக்கொண்டு [11] பாறையைத் தீப்பொறி பறக்கத் தோண்டி வரும் ஊறிய நீர் கொங்கர் மேய்க்கும் ஆனிரைகளுக்குக் குடிநீர்.[12]
- குரம்பை வீட்டுப் பக்கத்தில் தாழியில் பருத்திச் செடி வளர்த்து, அதன்காய்களை வளர்ப்பு மான்களுக்கு ஊட்டுவர். வெடிக்கும் பருத்தியைப் பறித்து மடியில் கட்டிடிக் கொள்வர்.[13]
சிலம்புகழி நோன்பு
- அவளுடைய காதலனுடன் தன் மகளை அனுப்பி வைத்த செவிலித்தாய் சிலம்பைக் கழற்றி வைக்கும் சிலம்புகழி நோன்பாகிய திருமண நிழ்ச்சி இல்லாமல் சென்றுவிட்டாளே என்று கலங்குகிறாள்.[14]
- சிலம்பு கழி நோன்பு இல்லாமல் காதலனுடன் சென்ற தன் மகள் ஆலம் விழுதில் கட்டிய ஊஞ்சலில் அவளுடைய காதலன் அவளைடைய இடுப்பைப் பிடித்து ஆட்டி விட ஆடி மகிழ்ந்தாள் எனச் செவிலி ஒருத்தி குறிப்பிடுகிறான்.[15]
மக்களின் சமய நெறி
விளையாட்டு
- நெய்தல் நில ஊதை மணலில் சிறுமியர் தோழிமாருடன் சேர்ந்து வண்டலும், ஓரையும் விளையாடுவர்.[20]
பாடலில் உவமை நலம்
- வழிப்போக்கர் அறுத்துப் போட்ட துண்டுப் பிரண்டை பச்சைப் பாம்பு போல் வழியில் கிடக்கும் [21]
- அவள் கண் சோழரின் குடந்தைவாயிலில் பூத்த நீல மலர போலவும், கைவிரல் பொதியமலையில் பூத்த காந்தள் மலர் போலவும் இருந்தன.[22]
பொதுச்செய்தி
- யானை ஓமை மரப் பட்டைகளை விரும்பி உண்ணும்.[23]
- கருக்கிலைப் பனைமரமும் காட்டுவேம்பும் மணல்பாலையின் மரங்கள்.[24]
- வாகை நெற்று மகளிரின் காலணி சிலம்பு போல ஒலிக்கும்.[25]
- காதலர் உப்பங்கழியில விளையாடுவர் [26]
- தேரில் மணி கட்டியிர்ப்பர்.[27]
- வடுகர் குடிப் பார்வை வேட்டுவன் பழக்கிய பெண்மானைக் கொண்டு ஆண்மானைப் பிடிப்பான்.[28]
Remove ads
அடிக்குறிப்பு
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads