குடிமையியல்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

குடிமையியல் என்பது குடியுரிமையின் தத்துவார்த்த, அரசியல் மற்றும் நடைமுறை அம்சங்களைப் பற்றிய அறிவின் திரட்டு ஆகும். அதே போல் குடிமக்களின் உரிமைகள் மற்றும் கடமைகள்; ஒரு அரசியல் அமைப்பின் உறுப்பினர்களாகவும் அரசாங்கத்திற்காகவும் ஒருவருக்கொருவர் ஆற்றிக்கொள்ள வேண்டிய குடிமக்களின் கடமைகள் இவற்றைப் பற்றிய விரிவான ஆய்வியலாகும்..[1] இது குடிமையியல் சட்டம் மற்றும் குடிமக்கள் நடத்தைக்கான விதித் தொகுப்பு, குடிமக்கள் பற்றிய கவனத்தோடு அரசாங்கத்தைப் பற்றிய ஆய்வு ஆகியவற்றையும், அரசாங்கத்தின் செயல்பாடுகளிலும் மற்றும் அதன் அத்துமீறல்கள், தவறுதல்களைம் வெளிப்புறத்திலிருந்து எதிர்க்கும் காரணிகள் ஆகியவற்றையும் உள்ளடக்கியதாகும்.

கொடுக்கப்பட்ட அரசியல் அல்லது நெறிமுறை மரபின்படி, குடிமக்களுக்கு கல்வி புகட்டுவதைக் குடிமையியல் குறிக்கிறது. குடிமையியலின் வரலாறு, பண்டைய சீனாவில் கன்பூசியஸ் மற்றும் பழங்கால கிரேக்கத்தில் பிளேட்டோ ஆகியோரால் முன் வைக்கப்பட்ட கோட்பாடுகளிலிருந்து தொடங்குகின்றது எனலாம். மேற்கத்திய பாரம்பரியத்தாலான தாக்கம் சீனாவிற்கு வந்த பிறகு, மரபின்படியான சீன சட்டமும், சோவியத் சட்டத்தின் காரணமான தாக்கமும் திரும்பிய காலங்களுக்குப் பிறகு, 1839 இல் துவங்கிய மேற்கத்திய சட்டபூர்வ மரபுகள் சீன மொழியில் மொழிபெயர்க்கப்படுவதற்கு முன் மதிப்புடையதாக இருந்தது. இஸ்பெசிபிக் என்பது சீன சட்டங்களில் பயன்பட்ட பொதுவான, சாதாரண மொழியாகும். இம்மொழியானது கல்வியில் மிகவும் குறிப்பிடத்தக்க பங்கினை வகிக்கிறது.

Remove ads

வரையறை

மெர்ரியம்-வெப்ஸ்டர் அகராதி "குடிமக்களின் உரிமைகள் மற்றும் கடமைகளையும் மற்றும் அரசாங்கத்தின் வேலை எப்படி உள்ளது என்பதைப் பற்றிய திறனாய்வையும் பற்றிய அறிவின் பிரிவே குடிமையியல்" என வரையறுக்கிறது. அகராதி.காம் என்ற அகராதியானது "குடிமக்கள் சலுகைகள் மற்றும் வேண்டுகோள்களைப் பற்றிய அறிவியல்" என குடிமையியலை வரையறுக்கிறது.

குடிமையியல் கல்வி

"குடிமைக் கல்வி" என்பது சமூகத்தின் உறுப்பினர்கள் அல்லது சமூகத்தின் வருங்கால உறுப்பினர்களாகிய மக்களின் நம்பிக்கைகள், பொறுப்புகள், திறமைகள் மற்றும் செயல்கள் ஆகியவற்றை பாதிக்கும் அனைத்து செயல்களையும் பற்றிய கல்வியைக் குறிக்கிறது. குடிமைக் கல்வி வேண்டுமென்றே இருக்க வேண்டிய அவசியமில்லை; நிறுவனங்கள் மற்றும் சமூகங்கள் ஆகியவை மதிப்புகள் மற்றும் நெறிமுறைகளை பொருளற்ற முறையில் கடத்தி விடக்கூடும். இது நிச்சயமாக குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் பள்ளிக்கல்வி அல்லது கல்லுாரிக் கல்வியுடன் மட்டும் தொடர்புடையதல்ல. குடும்பங்கள், அரசாங்கங்கள், மதங்கள் மற்றும் வெகுஜன ஊடகங்கள் ஆகியவை கூட குடிமைக் கல்வி தொடர்பான சில நிறுவனங்களேயாம். குடிமைக் கல்வி என்பது வாழ்நாள் செயல்முறை என்பது புரிந்து கொள்ளப்பட வேண்டும்.[2]குடிமைக் கல்விக்கான ஒட்டுமொத்த குறிக்கோளானது, குடியாட்சி மற்றும் பங்குபெறும் அரசாளுகையில் குடிமக்களின் ஈடுபாடு மற்றும் ஆதரவை அதிகரிப்பதாகும். நல்ல அரசு நடைபெற வேண்டியதன் அவசியத்தை மக்கள் புரிந்து கொண்டு அதை வலியுறுத்த வேண்டியது இந்தக் குடிமைக் கல்வியின் பின்னால் உள்ள சித்தாந்தமாகும். குடிமைக் கல்வி மூன்று வெவ்வேறு கூறுகளைக் கொண்டது: குடிமை அறிவு, குடிமைத்திறன்கள் மற்றும் குடிமை மனப்பான்மை ஆகியவை ஆகும்.[3]

Remove ads

குடிமைக் கல்வி மீதான திறனாய்வு

அரிசுடாட்டிலின் கூற்றான "செய்வதற்கு முன் நாம் கற்றுக்கொள்ள வேண்டியவற்றை, அவற்றைச் செய்வதன் மூலம் நாம் கற்றுக்கொள்கிறோம்" என்பதற்கிணங்க. மேல்நிலை வகுப்புகளில் குடிமைக் கல்வியின் கூறுகளான விழுமியங்கள், சமூக நீதி, மக்களாட்சியின் மாண்பு போன்றவை அனுபவங்களின் மூலம் கற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்பதற்கான முயற்சி இருக்கிறது.[4][5][6][7] இந்த நோக்கத்திற்காக பள்ளிகள் நன்னெறியுடன் கூடிய நடத்தை மற்றும் தனிப்பட்ட பொறுப்புகளை ஊக்குவிக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. இந்த இலக்குகளை அடைவதற்கு பள்ளிகள் மூன்று பெரிய சுதந்திரங்களை அனுமதிக்க வேண்டும் - தெரிவு செய்வதற்கான சுதந்திரம், செயலில் சுதந்திரம் மற்றும் செயலின் விளைவுகளைத் தாங்குவதற்கான சுதந்திரம் - இவையே தனிப்பட்ட நபரின் பொறுப்புணர்ச்சியை அதிகரிக்கும் கூறுகளாகும்.[8]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads