குன்றத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில்

From Wikipedia, the free encyclopedia

குன்றத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில்map
Remove ads

குன்றத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் என்ற குன்றத்தூர் முருகன் கோயில் என்பது சென்னையின் புறநகர் பகுதியான காஞ்சிபுரம் மாவட்டத்தின் குன்றத்தூர் என்னும் ஊரில் அமைந்துள்ளது.[1] இக்கோயில் கௌமாரத்தின் முழுமுதற் கடவுளான முருகனுக்கு உரிதான கோவிலாகும்.‌

விரைவான உண்மைகள் குன்றத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில், அமைவிடம் ...
Remove ads

தலபுராணம்

இந்து சமய தொன்மத்தின்படி முருகப்பெருமான் திருப்போரூரில் இருந்து திருத்தணிக்கு தனது பயணத்தின்போது இம்மலையில் தங்கினார் என கூறப்படுகிறது.

வரலாறு

இக்கோயில் பொ.ஊ. பன்னிரெண்டாம் நூற்றாண்டில் இரண்டாம் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்டது. 1726-ஆம் ஆண்டில் மதுரை நாயக்கரால் மேம்படுத்தப்பட்டது. குன்றத்தூர் முருகன் கோயில் சுமார் 900 ஆண்டுகளாகப் பக்தர்களால் வழிபடுவதாக கூறப்படுகிறது. குன்றத்தூர் முருகன் கோவில் கிபி 10ஆம் நூற்றாண்டில் சோழர்களால் கட்டப்பட்டது இந்த குன்றத்தூர் முருகன் கோவில். தமிழ்நாட்டில் தொண்டை மண்டலத்தில் மிகவும் முக்கியமான முருகன் கோவில் ஆகும்.

கோவிலின் சிறப்புகள்

இது 84 படிகள் கொண்ட மலைக்கோவில். மூலவர் வட திசையைப் பார்த்து உள்ளார்.

Remove ads

கோவில் அமைப்பு

இக்கோயிலின் கருவறையில் வள்ளி, தெய்வானை உடனுறை முருகப்பெருமான் உள்ளார். முருகப்பெருமான் கருவறை கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, விஷ்ணு துர்க்கை ஆகிய மூர்த்தங்கள் உள்ளன. கோவிலின் பிரகாரத்தில் காசி விசுவநாதர், விசாலாட்சி, பைரவர், நாகர், நவக்கிரக சன்னிதிகள் ஆகியவை அமைந்துள்ளன.

மண்டபத்தின் ஓரத்தில் உள்ள அரசமரத்தின் அடியில் நாகலிங்கேஸ்வரர் சந்நிதி உள்ளது.

நேர்த்திக்கடன்

  • அரச மரத்தில் தொட்டில் கட்டி பிராத்தனை.
  • குழந்தையின் எடைக்கு எடை பழம், சர்க்கரை, வெல்லம் அளித்தல்.

கந்தழீஸ்வரர்

குன்றத்தூர் மலையில் இருந்த முருகப்பெருமான், ஒரு சிவலிங்கத்தை உருவாக்கி பிரதிஷ்டையும் செய்து பூஜித்தார். மலை அடிவாரத்தில் தனி கோவிலில் ‘கந்தழீஸ்வரர்’ உள்ளார்.[2]

மேற்கோள்

படத்தொகுப்பு

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads