குருணாகல்
ஸ்ரீலங்காவின் நகரம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
குருணாகல் அல்லது குருநாகல் (Kurunegala, சிங்களம்: කුරුණෑගල) அல்லது குருநாகலை இலங்கையின் ஒரு நகரமாகும். இதுவே இலங்கையின் வட மேல் மாகாணத்தின் தலைநகரமாகும். குருநாகல் என்பது இந்நகரம் அமைந்துள்ள குருநாகல் மாவட்டத்தையும் அதன் நிர்வாக அலகான குருநாகல் நகரத்தையும் குறிக்கிறது. இந்நகரம் இலங்கையின் பண்டைய இராசதானிகளின் ஒன்றின் தலைநகராகவும் விளங்கி வந்தது. தெங்கு மற்றும் நெற்பயிர்ச் செய்கைகள் முக்கிய இடம் வகிக்கின்றன.
ரம்பொடகல மகாவிகாரையில் ஒரே கல்லில் 67.5 அடி உயரத்தில் செதுக்கப்பட்ட புத்தர் சிலை இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திறந்து வைத்தார்.[1]
Remove ads
காலநிலை
குருணாகலினுடைய காலநிலை வெப்பமண்டலக் காடுகளை ஒத்ததாக காணப்படுகின்றது. ஏப்ரலில் வெப்பநிலை கிட்டத்தட்ட 35 °C (95 °F) அளவிற்கு உயர்கின்றது. குருணாகலின் மழைவீழ்ச்சி 2,000 மில்லிமீட்டர்கள் (79 அங்) ஆகும்.
Remove ads
மக்கள்
குருணாகலின் மக்கள்தொகை 2001 இல் 28,401 ஆக இருந்தது.[3] ஆண்களின் தொகை 14626. பெண்களின் தொகை 13775. அதிகமாக சிங்களவர்கள் வசிக்கிறார்கள்.
Source: 2001 Census Data[4]
Remove ads
மொழி
குருணாகலில் சிங்கள மொழி பேசுபவர்கள் அதிகம். தமிழும் ஆங்கிலமும் கூட பேசப்படுகின்றது.
மேற்கோள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads