குர்ரம் சகர்

ஈரானிய நகரம் From Wikipedia, the free encyclopedia

குர்ரம் சகர்map
Remove ads

கோற்றாம்சார் (Khorramshahr Persian: خرمشهر, பிற பெயர்கள்: Khurramshahr, அரபி - المحمرة al-Muḥammarah) [2] என்பது கோற்றாம்சார் மண்டலத்தின் தலைநகரம் ஆகும் . 2006 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட, மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 26,383 குடும்பங்களில், 123,866 நபர்கள் வாழ்ந்தனர். கோற்றாம்சார் நகரமானாது, உள்நாட்டு துறைமுக நகரமாகும். அபாடானின் வடக்கு திசையில் சுமார் 10 கிலோமீட்டர்கள் (6.2 mi) தொலைவில் அமைந்துள்ளது. அர்வன்டு ரூடு நீர்வழிப்பாதையின் வலது கரை வரையில் இந்த நகரம் நீண்டு, கருண் ஆற்றுடன் இணைகிறது. மொகெசென் ரஸ்தானி (பிறப்பு1958), நிழற்படக் கலைஞர் இந்நகரைச் சார்ந்த குறிப்பிடத்தக்கவரில் ஒருவராவார்.

விரைவான உண்மைகள் Khorramshahr خرَمشَهر (பாராசீகம்)المحمرة (அரபி), நாடு ...
Remove ads

மக்கள் தொகை

2016 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, ஒட்டுமொத்த ஈரான் நகரங்களின் மக்கள் தொகை அடர்வில், இந்த நகரம் 75 வது இடத்தினைப் பெறுகிறது.[1] பொதுவாக ஈரான் நாட்டில் நகரங்களில் மக்கள் குடியேற்றம், இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து, வேகமாக அதிகரித்து வருகின்றது என ஐக்கிய நாட்டு ஆய்வுகள் கூறுகின்றன. [3][4] இந்த நாட்டில், ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும் ஒரு முறை மக்கள் தொகைக் கணக்கெடுப்பு எடுக்கப்படுகின்றது. இந்த நகரத்தில், பல்வேறு மொழியிலானப் பாரம்பரியக் குடும்பங்கள் வாழ்ந்தாலும், பெரும்பான்மையான ஈரானியக் குடும்பங்களில் பிறந்தவர்கள், பல்வேறு சமூக சீரமைப்புடன் தொடர்புடையவர்களாக இருந்தாலும், எந்த வகையான உறவுகளை விடவும், தமது குடும்ப வழித்தோன்றல்களுக்கு, அதிக முக்கியத்துவத்தைக் கொடுக்கின்றனர். இதனால் அவர்கள் அருகருகே வாழ்ந்தாலும், தொலைவில் வாழ்ந்தாலும், சிறிய, பெரிய குடும்பங்களுக்கு இடையை நிலவும், குடும்ப உறவுப் பிணைப்புகள், அனைத்தும் உறுதியுடன் இருக்கின்றன. மேலும், அவரவர் நடத்தும் தொழில்களிலும், குடும்ப உறுப்பினர்கள் பின்னிப்பிணைந்து இயங்கி, சமூகத்திலும், செய்யும் தொழிலும், நன்மதிப்பைப் பெற்று திகழ்கின்றனர்.[5] 2016 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட தொகை கணக்கெடுப்பின்படி, இந்த நகரத்தின் மக்கள் தொகை 133,097 நபர்களைக் கொண்டிருந்தது. இதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட, அரசின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, அதாவது 2011 ஆம் ஆண்டு, 129,418 நபர்கள், இந்நகரத்தில் வாழ்ந்திருந்தனர். தற்பொழுது உள்ள மக்கள் தொகை எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது, இந்நகரத்தின் மக்கள்தொகை அடர்வு +2.84% அதிகரித்துள்ளது.

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads