குவாரசமிய அரசமரபு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
குவாரசமிய அரசமரபு (/kwəˈræzmiən/;[4] அல்லது அனுஸ்டெஜின் அரசமரபு என்பது ஒரு பாரசீக[5][6][7] சன்னி இசுலாம் அரசமரபு ஆகும். இது துருக்கிய அடிமைகளில் இருந்து தோன்றியது.[8][9] இந்த அரசமரபு உயர் நடுக்காலத்தில் நடு ஆசியா மற்றும் ஈரானின் பெரும் பகுதிகளை ஆண்டது. தோராயமாக 1077 முதல் 1231 வரை ஆண்டது. முதலில் இவர்கள் செல்ஜுக்குகள்[10] மற்றும் காரா கிதான்களுக்குக்[11] கப்பம் கட்டுபவர்களாக இருந்தனர். பின்னர் சுதந்திரமாகச் செயல்பட்டனர். 13ம் நூற்றாண்டில் மங்கோலியர்களின் குவாரசமியப் படையெடுப்பு வரை இவ்வாறு செயல்பட்டனர்.
இந்த அரசமரபு தளபதி அனுஷ்டிஜின் கர்ச்சாயால் தொடங்கப்பட்டது. இவர் செல்ஜுக் சுல்தான்களின் முன்னாள் துருக்கிய அடிமை ஆவார். இவர் குவாரசமியாவின் ஆளுநராக நியமிக்கப்பட்டிருந்தார். இவரது மகன் முதலாம் குத்ப் அத்-தின் முஹம்மத் இவரது பரம்பரையில் வந்த குவாரசமியாவின் முதல் ஷா ஆவார்.[12]
Remove ads
உசாத்துணை
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads