குவிக்சில்வர்

From Wikipedia, the free encyclopedia

குவிக்சில்வர்
Remove ads

குவிக்சில்வர் (ஆங்கிலம்: Quicksilver) என்பது மார்வெல் காமிக்சு நிறுவனத்தால் வெளியிடப்பட்டு அமெரிக்க வரைகதை புத்தகத்தில் தோன்றிய ஒரு கனவுருப்புனைவு மீநாயகன் கதாபாத்திரம் ஆகும். இந்தக் கதாபாத்திரம் ஸ்டான் லீ மற்றும் ஜாக் கிர்பி ஆகியோரால் உருவாக்கப்பட்டது. குவிக்சில்வரின் முதல் தோற்றம் மார்ச் 1964 இல் அன்கேனி எக்ஸ்-மென் #4 இல் இருந்து தோற்றுவிக்கப்பட்டது. இந்த கதாபாத்திரம் எக்ஸ்-மென் மற்றும் அவென்ஜர்ஸ் போன்ற தொடர்களில் அறிமுகப்படுத்தப்பட்டது. வரலாற்று ரீதியாக அவென்ஜர்ஸ் அணி உறுப்பினராக சித்தரிக்கப்பட்டுள்ளது.

விரைவான உண்மைகள் குவிக்சில்வர், வெளியீடு தகவல் ...

குவிக்சில்வர் அதிக வேகத்தில் நகரும் மனிதனுக்கு அப்பாற்பட்ட திறனைக் கொண்டுள்ளது. பெரும்பாலான சித்தரிப்புகளில் இவர் ஒரு மனிதனுக்கும் மற்றும் மனிதனுக்கு அப்பாற்பட்ட சக்தி கொண்ட மீநாயகனுக்கும் பிறந்தவனாக சித்தரிக்கப்பட்டுள்ளது. குவிக்சில்வர் பாத்திரம் எக்ஸ் மெனுடன் தொடர்புடைய புனைகதைகளில் எக்ஸ்-மென் அணியின் எதிரியாக அறிமுகப்படுத்தப்பட்டது. பிற்கால கதைகளில் இவர் ஒரு சூப்பர் ஹீரோவாக ஆனார். பெரும்பாலான சித்தரிப்புகளில் ஸ்கார்லட் விட்ச்சின் இரட்டை சகோதரராகவும், மக்னெட்டோவின் மகனாகவும் மற்றும் போலரிஸின் அரை சகோதரராகவும் சித்தரிக்கப்பட்டுள்ளது.

காமிக் புத்தகங்களின் வெள்ளி காலத்தில் அறிமுகமான குவிக்சில்வர் பல தசாப்தங்களாக மார்வெல் தொடர் தொடர்ச்சியில் இடம்பெற்றுள்ளார். இவர் குவிக்சில்வர் என்ற தொடரிலும் மற்றும் அவென்ஜர்ஸ் என்ற மீநாயகன் தொடரிலும் வழக்கமான குழு உறுப்பினராக நடித்தார். 2006 ஆம் ஆண்டில் ஐ.ஜி.என் அவர்களின் "எல்லா நேரத்திலும் சிறந்த 25 எக்ஸ்-மென்" பட்டியலில் குவிக்சில்வர் 23வது இடமும்[1] மற்றும் "சிறந்த 50 அவென்ஜர்ஸ்" பட்டியலில் 44வது இடமும் பிடித்தார்.[2]

இந்த பாத்திரம் திரைப்படம், தொலைக்காட்சி மற்றும் நிகழ்பட ஆட்ட தழுவல்களிலும் தோன்றியுள்ளது. குவிக்சில்வரின் பாத்திரம் இரண்டு தனித்தனி நேரடி திரைப்படங்களில் இரண்டு வெவ்வேறு திரைப்பட நிறுவனங்களால் தழுவப்பட்டுள்ளன. நடிகர் ஆரோன் டெய்லர் ஜான்சன் என்பவர் இந்த கதாபாத்திரத்தை மார்வெல் திரைப் பிரபஞ்சம் உரிமையில் கேப்டன் அமெரிக்கா: த வின்றர் சோல்யர் (2014), அவெஞ்சர்ஸ்: ஏஜ் ஆஃப் அல்ட்ரான் (2015) இல் சிறப்புத் தோற்றத்தில் நடித்தார். மற்றும் நடிகர் இவான் பீட்டர்ஸ் என்பவர் 20ஆம் சென்சுரி பாக்ஸ் உரிமையில் எக்சு-மென்: இடேசு ஒஃப் பியூச்ச ஃபாசுற்று (2014), எக்ஸ்-மென்: அப்போகலிப்ஸ் (2016) எக்ஸ்-மென்: டார்க் பீனிக்ஸ் (2019) மற்றும் சிறப்புத் தோற்றம் டெட்பூல் 2 (2018) போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

Remove ads

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads