கே. எம். காதர் மொகிதீன்

இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia

கே. எம். காதர் மொகிதீன்
Remove ads

பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் (K.M. Kader Mohideen) (பிறப்பு 5 சனவரி 1940) இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் ஆவார். [1][2]

விரைவான உண்மைகள் தகைசால் தமிழர்கே. எம். காதர் மொகிதீன், தேசியத் தலைவர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ...
Remove ads

வாழ்க்கைக் குறிப்பு

தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டத்தில் திருநல்லூர் என்ற கிராமத்தில் 5-1-1940ம் நாள் பிறந்தார்.

ஆங்கிலம், அரபு, உருது, இந்தி, பார்ஸி போன்ற மொழிகளை நன்கறிந்தவர். சிறந்த பேச்சாளர்.

வகித்த பொறுப்புகள்

  • இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசியப் பொதுச் செயலாளரும், தமிழ் மாநிலத் தலைவராகவும் இருந்தவர்.
  • 2004-ஆம் ஆண்டில் வேலூர் மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[3]
  • இஸ்லாமிய தமிழிலக்கியக் கழகத்தின் உலக ஒருங்கிணைப்பாளர்.
  • மணிச்சுடர் இதழின் ஆசிரியர்.
  • திருச்சி ஜமால் முகம்மது கல்லூரியில் 15 ஆண்டுகள் வரலாற்றுத்துறைப் பேராசிரியராகப் பணியாற்றினார்

படைப்புகள்

  • வாழும் நெறி
  • குர்ஆனின் குரல்
  • இஸ்லாமிய இறைக்கோட்பாடு

உட்பட ஆறு நூல்களை எழுதியுள்ளார்.

செம்மொழி மாநாட்டில் தமிழகத்துக்கும், அரபகத்துக்கும் உள்ள தொடர்புகள் பற்றிய ஆய்வுக் கட்டுரை வழங்கி

8 ஆண்டுகள் தாருல் குர்ஆன் இதழில் 'தமிழர்க்கு இஸ்லாம் வந்த மதமா? சொந்தமா?' எனும் தலைப்பில் தொடர் கட்டுரையை எழுதியுள்ளார்.

பெற்ற விருதுகளும் கௌரவங்களும்

  • முதுகலை வரலாற்றில் முதல் மாணவனாகத் தேறித் தங்கப் பதக்கம்
  • இஸ்லாமியத் தமிழிலக்கியக் கழகத்தின் தமிழ்மாமணி விருது
  • விடுதலைச் சிறுத்தைகள் இயக்கம் பிறை விருதும் உரூ.50000 பொற்கிழியும் வழங்கி கௌரவித்துள்ளது.
  • தமிழ்நாடு அரசின் தகைசால் தமிழர் விருதினை 2025 ஆம் ஆண்டு பெற்றார்.[4]

இலட்சியம்

தமிழ் நாட்டில் திருக்குர்ஆன் பல்கலைக்கழகம் ஒன்றை அமைக்க வேண்டும் என்பதைத் தம் வாழ்வின் இலட்சியமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறார்.

உசாத்துணை

  • இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads