கே. டி. ராஜேந்திர பாலாஜி
இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
கோமா. டி. ராஜேந்திர பாலாஜி ஓர் தமிழக அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினரும் ஆவார். இவரது பூர்வீகம் அருப்புக்கோட்டை அருகே உள்ள குறுந்தமடம் கிராமமாகும். தந்தை பெயர் தவசிலிங்கம். ராஜேந்திர பாலாஜி மூன்று சகோதரி உண்டு. இவர் பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளார். இவர் திருமணம் செய்துகொள்ளவில்லை. எம்.ஜி.ஆரின் மறைவுக்குப்பின் அ.தி.மு.க. பிளவுபட்டபோது இவர் ஜெயலலிதா அணியில் திருத்தங்கல் நகர செயலாளராக இருந்தார்.[1] இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சிவகாசி தொகுதியிலிருந்து தமிழக சட்டபேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு,[2] தமிழக அரசின் செய்தி மற்றும் சிறப்புப் பணிகள் செயலாக்கத் துறை அமைச்சராக பணியாற்றினார்.[3] அதன்பின் மாவட்ட செயலாளர் ஆனார். மீண்டும் 2016 ஆண்டு சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் மீண்டும் தமிழக அமைச்சரவையில் பால்வளத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.[4] இவர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர். இவர் இப்போது விருதுநகர் அதிமுக மாவட்டச் செயலாளராக பொறுப்பு வகிக்கிறார்.
செய்திகளை அறிந்திட இங்கே கிளிக் செய்யவும்... கே.டி.ஆர். அறம் செய்வோம்... KTR Aram Seivom[5]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads