கொன்யா-ஊர்கெஞ்ச்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கொன்யே-ஊர்கெஞ்ச் (துருக்மேனியம்: Köneürgenç; உருசியம்: Куня Ургенч, குன்யா ஊர்கெஞ்ச் – பாரசீகம்: குஹ்னா குர்கஞ்ச் کهنه گرگانج) – பழைய குர்கஞ்ச் அல்லது குன்யா-ஊர்கெஞ்ச் அல்லது பழைய ஊர்கெஞ்ச் அல்லது ஊர்கஞ்ச் என்பது ஒரு நகராட்சி ஆகும். இதன் மக்கள் தொகை சுமார் 30,000 ஆகும். இது வடக்கு துர்க்மெனிஸ்தான் நாட்டில் உஸ்பெகிஸ்தான் எல்லைக்குத் தெற்கில் அமைந்துள்ளது. பண்டைய பட்டணமான ஊர்கெஞ்ச் இந்தத் தளத்தில் தான் அமைந்திருந்தது. இந்தத் தளத்தில் தான் அகேமெனிட் பேரரசின் ஒரு பகுதியான குவாரசமியாவின் தலைநகரின் சிதிலங்கள் உள்ளன. இதன் குடிமக்கள் 1700களில் இப்பட்டணத்தை விட்டு வெளியேறினர். ஒரு புதிய குடியிருப்பை உருவாக்குவதற்காக அவர்கள் வெளியேறினர். அப்போதிருந்து குன்யா-ஊர்கெஞ்ச் எந்தத் தொந்தரவும் செய்யப்படாமல் அப்படியே உள்ளது. 2005ல் பழைய ஊர்கெஞ்சின் சிதிலங்கள் யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியத் தளங்களின் பட்டியலில் பொறிக்கப்பட்டது.[1]
Remove ads
உசாத்துணை
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads