கொள்ளிடம் (ஊர்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கொள்ளிடம் (Kollidam) என்பது தமிழ்நாட்டின், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஒரு ஊராகும். இந்த ஊரை கொள்ளிடம் ஆறு கடந்து செல்வதால் இந்த ஊர் கொள்ளிடம் என்று அதன்பெயரையே பெற்றது. கொள்ளிடம் ஆற்றின் முகத்துவாரத்தில் இருந்து ஏழு மைல் தொலைவில் இந்த ஊர் அமைந்துள்ளது.[1]
Remove ads
நிருவாகம்
ஊராட்சியாக இருந்த இந்த ஊர் 2025 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசால் பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.[2][3]
அமைவிடம்
இந்த ஊரானது மாவட்ட தலைநகரான மயிலாடுதுறையிலிருந்து 31 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.[4]
பிற தகவல்கள்
கொள்ளிடம் ஊரில் காவல் நிலையம், பத்திரப்பதிவு அலுவலகம், அஞ்சல் அலுவலகம், தொடருந்து நிலையம், பேருந்து நிலையம், மின்வாரிய அலுவலகம், பள்ளிகள், மருத்துவமனைகள் கடைவீதி போன்ற வசதிகள் உள்ளன.
மேற்கோள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads