கோப்பாய் இராணுவத் தளம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

கோப்பாய் இராணுவத் தளம் (Kopay Army Base) என்பது இலங்கையின் கோப்பாயில் அமைந்துள்ள ஒரு இராணுவத் தளம் ஆகும். இது தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் துயிலும் இல்லத்தை அழித்து அந்த இடத்தில் அமைக்கப்பட்டது ஆகும்.

விரைவான உண்மைகள் கோப்பாய் இராணுவத் தளம், ஆள்கூறுகள் ...
Remove ads

வரலாறு

Thumb
2004 இல் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம்

1990 களின் முற்பகுதியில், தமிழீழ விடுதலைப் புலிகள் யாழ்ப்பாணக் குடாநாட்டின் வலிகாமம் பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தபோது, அவர்கள் கோப்பாயில் மாவீரர்களுக்காக ஒரு துயிலும் இல்லத்தைக் கட்டினார்கள். 1995 இல் வலிகாமத்தை மீண்டும் கைப்பற்றிய இலங்கை இராணுவம் உழுவைகளைப் பயன்படுத்தி விடுதலைப் புலிகளின் இடுகாட்டை அழித்தது.[1][2][3] 2002 ஆம் ஆண்டில் நோர்வே அமைதி முயற்சிக்கான முன்னெடுப்புகள் துவங்கப்பட்டதன் பின்னர், கோப்பாய் உட்பட தமது மாவீரர் துயிலும் இல்லங்களைப் புலிகள் மீளக் கட்டியெழுப்பத் துவக்கினர்.[1][2] 2009 மே இல் இலங்கை உள்நாட்டுப் போரில் விடுதலைப் புலிகளின் தோல்விக்குப் பிறகு இலங்கை அரசாங்கம்/இராணுவம் மீண்டும் விடுதலைப் புலிகளின் துயிலும் இல்லங்களையும், இறந்த விடுதலைப் புலிகளின் பிற நினைவுச் சின்னங்களையும் அழிக்கத் தொடங்கியது.[4] 2010 சூன் மாதம் இலங்கை இராணுவம் கோப்பாய் துயிலும் இல்லத்தை அழித்தது.[5] அங்கு 2,000 கல்லறைகள் இருந்தன.[6]

பின்னர் இலங்கை இராணுவம் கல்லறைகள் இருந்த இடத்தில் ஒரு இராணுவ தளத்தை உருவாக்கத் தொடங்கியது.[7][8] 2021, மார்ச், 4 அன்று இலங்கை இராணுவத்தின் 51வது படைப் பிரிவின் புதிய தலைமையகம் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரியவினால் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.[6][9]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads