கோலாலம்பூர் கூட்டாட்சி

From Wikipedia, the free encyclopedia

Remove ads

கோலாலம்பூர் கூட்டாட்சி, (மலாய்: Wilayah Kuala Lumpur; ஆங்கிலம்: Kuala Lumpur Federal Territory; என்பது மலேசியாவின் கூட்டரசு அரசாங்கத்தால் நேரடியாக நிர்வகிக்கப்படும் கூட்டரசு நிலப் பகுதிகளில் ஒன்றாகும் (Federal Territories of Malaysia). மலேசியக் கூட்டரசு பிரதேசங்களின் அமைச்சின் கீழ் செயல் படுகின்றது.[1]

விரைவான உண்மைகள் கோலாலம்பூர் கூட்டாட்சி Kuala LumpurFederal Territory, கூட்டாட்சி ...

மலேசியாவில் மூன்று பிரதேசங்கள் உள்ளன. அவை கோலாலம்பூர், லபுவான் மற்றும் புத்ராஜெயா. இவற்றுள்:

கோலாலம்பூர் மலேசியாவின் தேசிய தலைநகரம்.

புத்ராஜெயா நிர்வாகத் தலைநகரம்.

லபுவான் ஒரு கடல்சார் அனைத்துலக நிதி மையம்.

கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயா ஆகியவை சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள பகுதிகளாகும். அதே சமயத்தில் லபுவான் கூட்டரசு பிரதேசம், சபா கடற்கரையில் உள்ள ஒரு தீவுப் பகுதி ஆகும்.

பெரும் கோலாலம்பூர், அல்லது கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில், 2012-ஆம் ஆண்டி புள்ளிவிவரங்களின்படி 7.2 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர்.

மலேசியாவில் மக்கள் தொகையிலும்; பொருளாதாரத்திலும்; மிக விரைவாக வளர்ச்சி பெற்று வரும் பெருநகரப் பகுதிகளில் ஒன்றாக கோலாலம்பூர் கூட்டாட்சி விளங்குகிறது.[2]

Remove ads

வரலாறு

கோலாலம்பூர் கூட்டாட்சி பிரதேசம் முதலில் சிலாங்கூர் மாநிலத்தின் ஒரு பகுதியாக இருந்தது. 1948-ஆம் ஆண்டில் மலாயா கூட்டமைப்பு (Federation of Malaya) அமைக்கப் பட்டதும், கோலாலம்பூர் நகரம் தேசியத் தலைநகராக மாறியது. அதற்கு முன்னர் சிலாங்கூர் மாநிலத்தின் தலைநகரமாகவும் இருந்தது.[3]

1957-ஆம் ஆண்டில் சுதந்திரம் பெற்றதில் இருந்து, கோலாலம்பூர் கூட்டாட்சிக்கும் மற்றும் சிலாங்கூர் மாநிலத்திற்கும் ஆளும் கட்சியின் கூட்டணியாக அலையன்ஸ் (Alliance) இருந்தது. பின்னர் இந்தக் கூட்டணி பாரிசான் நேசனல் என்று பெயர் மாற்றம் கண்டது.

அரசாங்க ஆளுமைகளுக்கு இடையே மோதல்கள்

இருப்பினும், 1969-ஆம் ஆண்டுத் தேர்தலில் அந்த அலையன்ஸ் கூட்டணி, கூட்டாட்சி அரசாங்கத்தின் கட்டுப்பாட்டைத் தக்க வைத்துக் கொண்டாலும், சிலாங்கூர் மாநிலத்தில் அதன் பெரும்பான்மையை எதிர்க்கட்சியிடம் இழந்தது. அதே தேர்தல் கோலாலம்பூரில் பெரும் இனக் கலவரத்தையும் ஏற்படுத்தியது.

கோலாலம்பூர் நகரம் சிலாங்கூரின் ஒரு பகுதியாக இருக்கும் வரையில், கூட்டாட்சி மற்றும் சிலாங்கூர் மாநில அரசாங்கங்கள் வெவ்வேறு கட்சிகளால் கட்டுப் படுத்தப்படும் போது அரசாங்க ஆளுமைகளுக்கு இடையே மோதல்கள் ஏற்படலாம் என்பது உணரப் பட்டது.

கோலாலம்பூரைச் சிலாங்கூர் மாநிலத்தில் இருந்து பிரித்து, நேரடியாகக் கூட்டாட்சி ஆட்சியின் கீழ் கொண்டு வருவதே சரியான தீர்வு என முடிவு செய்யப்பட்டது. 1974 பிப்ரவரி 1-ஆம் தேதி, கோலாலம்பூர் கூட்டாட்சிப் பகுதி ஒப்பந்தம் கையெழுத்தானது. அன்றைய நாளில் இருந்து கோலாலம்பூர் மலேசியாவின் முதல் கூட்டாட்சிப் பிரதேசமாக மாறியது.[3]

கூட்டாட்சி பிரதேசங்களுக்குப் பொதுவான அடையாளம்

அண்மைய ஆண்டுகளில், மூன்று கூட்டாட்சி பிரதேசங்களுக்கும் பொதுவான அடையாளத்தை உருவாக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. கூட்டாட்சி பிரதேசத்தின் கொடியானது கூட்டாட்சி பிரதேசங்களை ஒட்டு மொத்தமாக பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அறிமுகப் படுத்தப்பட்டது.

2006ஆம் ஆண்டு கெடாவில் நடந்த சுக்மா விளையாட்டுப் போட்டியின் போது (2006 Sukma Games), கோலாலம்பூர், லபுவான் மற்றும் புத்ராஜெயா ஆகியவை கூட்டாட்சிப் பகுதிகளின் ஒருங்கிணைந்த குழுவாக இணைக்கப்பட்டன.

Remove ads

கூட்டாட்சி பிரதேசக் கொடி

கூட்டாட்சி பிரதேசங்களின் அதிகாரப்பூர்வப் பண் "முன்னேற்றம் மற்றும் செழிப்பு" (Maju dan Sejahtera). கூட்டாட்சி பிரதேசங்களுக்கு என தனி ஒரு கொடி உள்ளது. இருப்பினும் ஒவ்வொரு கூட்டாட்சி பிரதேசமும் தங்களுக்கு என தனித்தனியாகச் சொந்தக் கொடிகளைக் கொண்டு உள்ளன.


மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads