சங்கர்ராம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

சங்கர்ராம் தமிழ்நாட்டில் வாழ்ந்த எழுத்தாளர் ஆவார். இவரது இயற்பெயர் டி.எல்.நடேசன் என்பதாகும்.[1] இவரது மண்ணாசை என்னும் புதினமே தமிழின் முதல் ஊரகப்புதினம் எனப்படுகிறது.[2]


மண்மணம் கமழும் நாவல் படைத்தவர்களுள் முன்னோடி சங்கரராம் என்ற டி.எல்.நடேசன் ஆவார். இவர் முதன்முதலில் புனைப்பெயரில் இரு நாவல்களை ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். (The Children of the Kaveri (1926) The Love of Dust (1938)). அதில் The Love of Dust நாவலை பின்னர் அவரே மண்ணாசை என்ற பெயரில் 1941 ஆம் ஆண்டில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார். மண்ணாசை நாவல் இவரது முதல் முழு கிராமிய நாவல். (ஆண்டு 1940 என்றும் குறிப்பிடப்படுகிறது Modern Indian Literature An Anthology - Modern Tamil Literature By Neela Padmanabhan பக்கம் 390). சங்கரராம் அவர்களின் மற்றொரு படைப்பு ‘காரியதரிசி’ ஆகும்.


Remove ads

படைப்புகள்

புதினம்

ஆங்கிலம்

  1. The Children of the Kaveri (1926)
  2. The Love of Dust (1938)

தமிழ்

  1. அருள்பண்ணை
  2. இன்பநினைவு
  3. காரியதரிசி
  4. தீயும் வெடியும்
  5. நாட்டாண்மைக்காரன்
  6. நீலா
  7. பார்வதி
  8. பெண் இனம்
  9. மண்ணாசை 1940 [3] இந்நூல் The Love of Dust புதினத்தின் மொழியாக்கம் ஆகும்.
  10. வீரசிற்பி

சிறுகதைத்தொகுதிகள்

  1. பஞ்சத்துக்கு ஆண்டி
  2. பரிசலோட்டி
  3. பரிவு
  4. பானா பரமசிவம்
  5. புதையல்
  6. மணமகனின் அன்பு

சான்றடைவு

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads