சஞ்சிதா கர்மா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இந்து சமயத்தில், சஞ்சிதா கர்மா என்பது மூன்று வகையான கர்மங்களில் ஒன்றாகும்.[1][2] பல பிறவிகளின் தொடர்பாக வித்தில் பதிவாகித் தனக்கும், தன் மூலம் பிறக்கும் பிற்காலக் குழந்தைகளுக்கும் அறிவு ஒழுக்கத் தரங்களாக சூக்கும வித்துவில் பதிந்து தொடருகின்ற வினைப் பதிவே சஞ்சித கர்மம் ஆகும்.
ஒருவன் பிறந்து வாழுகின்ற காலத்தில் செய்கின்ற செயல்களின் விளைவுப் பதிவு, செய்தொழிலால் ஏற்பட்ட அறிவின் அனுபவம் ஆகியவை மூளையில் பதிந்து, திரும்பத் திரும்ப அது மனதுக்கு நினைவூட்டிச் செயலாக மாற்றுகின்ற விதியே பிராரப்த கர்மம் ஆகும் .
புறமன இயக்கம் பதிவுகளாக புலன்களில் அமைந்து. இச்சை வயப்பட்டுச் செய்யப்படும் செயல்களின் விளைவு ஞானேந்திரியங்கள் மற்றும் கர்மேந்திரியங்களில் பதிவாகி திரும்பவும் உயிருக்கு ஊக்க மூட்டி மனம்,மொழி, செயல் மற்றும் ஆற்றல்கள் உடல் கருவிகளாகிய புலன்கள், உறுப்புகள் இவற்றில் திரும்பவும் ஊக்கமூட்டி செயல்படுத்தும் விதியே ஆகாமிய கர்மம் ஆகும் . [3][4][5][6]
Remove ads
இதனையும் காண்க
குறிப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads