சண்முகா நதி

From Wikipedia, the free encyclopedia

சண்முகா நதி
Remove ads

தமிழ்நாடு,திண்டுக்கல் மாவட்டம்,பழனி வட்டம்,பெரியம்மா பட்டி கிராமத்தில் பொந்துப்புளி பகுதியில் உருவாகும் பச்சையாறும், கொடைக்கானல் வட்டம், வடகவுஞ்சி கிராமம் பொய்யாவெளிப் பகுதியில் உருவாகும் ஆறு, பழனி வட்டம் ஆயக்குடி வனப் பகுதியில் உள்ள வரதமா நதி அணையில் இடைத் தேக்கம் ஆகி பின் அதன் உபரி நீர் வரதமா நதி ஆறும், கொடைக்கானல் வட்டம், வில்பட்டி ஒதுக்க வனப் பகுதியில் பாலாறும், கொடைக்கானல் வட்டம், பூம்பாறை மற்றும் வடகவுஞ்சி மேற்கு ஒதுக்க வனப் பகுதில் உருவாகும் பொருந்தலாறும், தாமரைக்குளம் பகுதியில் உருவாகும் கல்லாறும், பழனி வட்டம்,பெரியம்மாபட்டி கிராமம் பொந்துபுளி வனப்பகுதியில் உருவாகி,கரிக்காரன் புதூர்,இரவிமங்கலம் ஆகிய ஊர்களின் வழியே ஓடும் பச்சையாறும்,இடும்பன் ஏரியில் தேங்கி பின் உபரி நீர் ஆறாகும் முள்ளாறும் ஆகிய ஆறு நதிகளும் சங்கமிக்கும் இடத்தில் ஒன்றாகி சண்முகா நதி உருவாகிறது.

Thumb
சண்முகா நதி
Remove ads

சிறப்பு

Thumb
சண்முகா நதியில் பக்தர்கள்

தமிழ் கடவுள் முருகனை குறிக்கும் ஆறு நதிகளும் ஒன்றினைந்து முருகனின் பெயர்களில் ஒன்றான சண்முகர் என்ற பெயருடன் இணைத்து சண்முகா நதி என உருவாகிறது.[1] இந்த ஆறு வடக்கு நோக்கி மானூர்,அக்கரைப்பட்டி,கீரனூர்,அலங்கியம்,ஆகிய கிராமங்களின் வழியே ஓடி அலங்கியத்திற்கும்,தாராபுரத்திற்கும் இடையே காவிரி ஆற்றின் துணை ஆறான அமராவதி ஆற்றோடு கலந்துவிடுகிறது.

அடிக்குறிப்பு

வெளி இணைப்பு

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads