சந்திரசேகர் ஆசாத் இராவணன்
அரசியல் மற்றும் தலித்திய தலைவர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சந்திரசேகர் ஆசாத் இராவன் (பிறப்பு: டிசம்பர் 3, 1986) ஓர் இந்திய சமூக மற்றும் அம்பேத்கரிய ஆர்வலர் மற்றும் வழக்கறிஞர். அவர் பீம் ராணுவத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைவர் ஆவார்.[1] அவர் "இராவணன்" என்றும் அழைக்கப்படுகிறார். இருப்பினும், அவர் தனது பெயரிலிருந்து இராவணன் பட்டத்தை நீக்கியுள்ளார்.[2][3]
![]() | இந்தக் கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்தக் கட்டுரையைத் திருத்தி உதவுங்கள் |
ஆசாத் மேற்கு உத்தரப்பிரதேசத்தின் சஹரன்பூரின் கட்ககுலி கிராமத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை கோவர்தன் தாஸ் அரசுப் பள்ளியின் முதல்வராகயிருந்து ஓய்வு பெற்றார். கட்ககுலி பெரும் சாமர்கள் உங்களை வரவேற்கிறார்கள் என்ற தலைப்பில் ஒரு மன்றம் நிறுவப்பட்ட பின்னர் அவர் ஒரு தலித் தலைவராக முக்கியத்துவம் பெற்றார்.[4][5][6]
ஆசாத், சதீஷ்குமார் மற்றும் வினய் இரத்தன் சிங் ஆகியோர் 2014 ஆம் ஆண்டில் பீம் படை நிறுவினார்கள். இது இந்தியாவில் கல்வி மூலம் தலித்துகளின் விடுதலைக்காக [7][8] மற்றும் மேற்கு உத்தரப்பிரதேசத்தில் தலித்துகளுக்கு இலவச பள்ளிகளை நடத்துகிறது.[4]
சஹரன்பூர் வன்முறை சம்பவம் தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார்.[9] கைது செய்யப்பட்டவர்கள் அரசியல் ரீதியாக உந்துதல் பெற்றவர்கள் என்று குறிப்பிட்டு அலகாபாத் உயர்நீதிமன்றத்தால் ஜாமீன் வழங்கப்பட்டதை அடுத்து, உத்தரபிரதேச அரசு தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஆசாத் கைது செய்யப்பட்டார், தொடர்ந்து மாநில அரசால் சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமா பள்ளி, தில்லியில் இந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டம் 2019 எதிரான போராட்டத்தின் போது, ஒரு நேர்கானலில் அவர் கூறியது, 'நான் முஸ்லிம்களுக்காகப் பேசினால் அவர்கள் என்னைத் தலைகீழாகத் தொங்கவிடுவார்கள் என்று காவல்துறை சொன்னது.'
Remove ads
குறிப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads