சந்திரசேகர் வரையறை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சந்திரசேகர் வரையறை (Chandrasekhar limit) என்பது ஒரு நிலையான வெண் குறுமீனின் அதிக பட்ச திணிவு (Mass) அளவாகும். இது ஏறத்தாழ சூரியனின் நிறையைப்போல் 1.44 மடங்காகும் (2.765×1030 kg).[1][2][3] இதற்குக் கூடுதலான நிறையிருப்பின் அவ்விண்மீன் தனது நிலைத்தன்மையை இழக்கும். இவ்வரையறையைக் கண்டறிந்தவர் தமிழ் நாட்டில் பிறந்த புகழ் பெற்ற விஞ்ஞானியும், இயற்பியலிற்கான நோபல் பரிசு பெற்றவருமான சுப்ரமணியன் சந்திரசேகர் ஆவார்.
வெண் குறுமீன்கள், எலக்ட்ரான் சமநிலை குலைவு அழுத்தத்தால் (Electron Degeneracy Pressure) தமது திண்மத்தால் ஏற்படும்புவியீர்ப்பு விசையால் ஏற்படக்கூடிய குலைவைத் (Gravitational Collapse) தடுத்து நிலைபெறுகின்றன (பொதுவாக விண்மீன்கள், திண்மத்தால் ஏற்படக்கூடிய புவியீர்ப்பு குலைவை, அணுக்கரு இணைப்பில் உருவாகும் அழுத்தத்தால் (Thermal Pressure) ஈடுசெய்து நிலைத்திருக்கின்றன). சந்திரசேகர் வரையறை திண்ம அளவைத் தாண்டும்போது, புவியீர்ப்பு குலைவை எலக்ட்ரான் சமநிலை குலைவு அழுத்தத்தால் ஈடுசெய்ய இயலாமல் போகிறது. அதன் தொடர்ச்சியாக, அவ்விண்மீன் ஈர்ப்பு விசை குலைவின் விளைவாக நியூட்ரான் விண்மீனாகவோ (Neutron Star) அல்லது கருந்துளையாகவோ (Blackhole) உருப்பெருகிறது. சந்திரசேகர் வரையறைக்குள்ளாக திண்மம் கொண்ட விண்மீன்கள், வெண் குறுமீன்களாக நிலைத்திருக்கும்.[4]
Remove ads
உசாத்துணைகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads