சப்பானிய மொழி

From Wikipedia, the free encyclopedia

Remove ads

ஜப்பானிய மொழி ஜப்பானிய மற்றும் ஜப்பானிலிருந்து குடிபெயர்ந்த 130 மில்லியன் மக்களால் பேசப்படுகின்ற ஒரு மொழியாகும். ஜப்பானிய மொழியில் இது நிஹோங்கோ என்று அழைக்கப்படுகிறது. இது சிறப்பாக ஜப்பானில் மட்டுமே பேசப்பட்டு வருகின்ற போதும், ஜப்பானிலிருந்து இடம் பெயர்ந்து வேறு நாடுகளில் வசித்து வருபவர்களும் இம்மொழியைப் பேசி வருகின்றனர்.

விரைவான உண்மைகள் Japanese, உச்சரிப்பு ...

இம்மொழி ஜப்பானிய சமூக ஏற்ற தாழ்வுகளை குறிப்பதற்கு ஏதுவாக சிக்கலான மரியாதைச் சொற்களுடன் அமைந்த, தமிழைப் போன்ற ஒரு ஒட்டுச்சேர்க்கை மொழியாகும். வினைச்சொற்களும் சில குறிப்பிட்ட மொழிக்கூறுகளும், பேசுபவர், கேட்பவர் மற்றும் உரையாடலில் இடம்பெறுபவரின் சமூக உயர்வு நிலையை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. ஜப்பானிய மொழியின் மொத்த ஒலிகள் குறைவாக இருப்பினும் தனக்கே உரித்தான வட்டார ஓசை நயத்தைக் (pitch accent) கொண்டுள்ளது. இம்மொழியின் பூர்வீகம் பெரும்பாலும், 8ம் நூற்றாண்டில் பழங்காலத்து ஜப்பானிய மொழியில் இயற்றப்பட்ட மூன்று முக்கிய நூல்தொகுப்புகளால் அறியப்படுகிறது. ஆனால் சிறிய அளவில், இதற்கு முந்தைய காலகட்டங்களிள் இயற்றப்பட்ட செதுக்கள்களும் கிடைத்துள்ளன.

இம்மொழி மூன்று வகையான வரி வடிவங்களை கொண்டது. சீன வரிவடிவான காஞ்சி (漢字), மற்றும் சீன எழுத்துகளில் இருந்து உருவாகிய ஹிரகனா (平仮名) மற்றும் கதகான (片仮名). ஆங்கில மற்றும் வெளிநாட்டினரின் வார்த்தைகளை உச்சரிக்கவும், நிறுவன பெயர் அமைக்க, விளம்பரப்படுத்த மற்றும் கணினியில் எழுத்துக்களை உள்ளிடவும் ரோமாஜி(ローマ字) பயன் படுத்தப்படுகிறது. ,சீன, ஜப்பானிய எண்களைப் பயன்படுத்தினாலும் மேற்கத்திய அரேபிய எண்களும் பரவலாக பயன்படுகின்றன.

இம்மொழியில் அயல் மொழிகளிலிருந்து பெறப்பட்ட கடன் சொற்களின் தாக்கம் அதிகம் காணப்படுகிறது. முக்கியமாகக் கடந்த 1500 வருடங்களில் சீன மொழியில் இருந்து அதிகம் பெறப்பட்டுள்ளது அல்லது சீன மொழியை அடிப்படையாக கொண்டு சொற்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 19ம் நுற்றாண்டுப் பிற்பகுதியில் இந்தோ - ஐரோப்பிய மொழிகளில் இருந்து, முக்கியமாக ஆங்கிலத்திலிருந்து, கணிசமான வார்த்தைகள் பெறப்பட்டுள்ளன. 16 & 17 ம் நுற்றாண்டு போர்த்துகீசிய மற்றும் டச்சு நாட்டினருடனான வியாபாரத் தொடர்புகளால் இவ்விரண்டு மொழிகளின்ன் தாக்கமும் அதிகமாகவே உள்ளது.

Japanese 
Kyūshū

Satsugū

Hichiku

Hōnichi

 Western 

Chūgoku

Umpaku

Shikoku

Kansai

Hokuriku

Eastern

Tōkai–Tōsan

Kantō

inland Hokkaidō

Tōhoku

coastal Hokkaidō

Hachijō

மேலதிகத் தகவல்கள் Hiragana, Katakana ...
மேலதிகத் தகவல்கள் Kana, Revised Hepburn ...
Remove ads

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads